மத்திய அரசால் கடந்த மே 7-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட 'வந்தே பாரத்' பிரச்சாரத்தின் கீழ் இதுவரை சுமார் 3.6 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், மொத்தம் 5,13,047 இந்தியர்கள் வெளிநாடுகளில் உள்ள இந்திய பணிகள் மூலம் கட்டாய அடிப்படையில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவதற்கான கோரிக்கைகளை பதிவு செய்துள்ளனர் எனவும், அவர்களில் 3,64,209 பேர் இதுவரை நாடு திரும்பியுள்ளனர், மற்றவர்கள் விரைவில் நாடு திரும்புவர் எனவும் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தா தெரிவித்துள்ளார்.
READ | அடுத்த 2 ஆண்டுகளில் 40 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க இந்திய ரயில்வே திட்டம்...
இதுதொடர்பான தனது அறிக்கையில், அண்டை நாடுகளில் இருந்து நாடு திரும்பி வருவோரும் எல்லை பகுதிகள் வழியாக வந்துக்கொண்டு இருக்கின்றனர். அதன்படி இதுவரை 84,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நேபாளம், பூட்டான் மற்றும் பங்களாதேஷிலிருந்து நில எல்லை குடியேற்ற சோதனைச் சாவடிகள் மூலம் திரும்பி வந்ததாக வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலைலிய்ல வந்தே பாரத் மிஷனின் முதல் மூன்று கட்டங்களில், சுமார் 875 சர்வதேச விமானங்கள் ஐந்து கண்டங்களில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளன என்று ஸ்ரீவஸ்தா மேலும் தெரிவித்தார். இதுவரை, இந்த விமானங்களில் 700-க்கும் மேற்பட்ட விமானங்கள் இந்தியாவுக்கு இயக்கப்படுகின்றன, இது சுமார் 150,000 இந்தியர்களை திருப்பி கொண்டுவரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
READ | சிகாகோவிலிருந்து 168 பயணிகளுடன் சிறப்பு விமானம் ஹைதராபாத் வந்தடைந்தது...
ஸ்ரீவஸ்தா கூற்றுப்படி, எதிர்வரும் நாட்களில், மீதமுள்ள 175 விமானங்கள் 3-ஆம் கட்டத்தின் கீழ் வரும் என்று எதிர்பார்கலாம். வந்தே பாரத் மிஷன் (VBM) விமானங்கள் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் உடனடி தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவியாக இருந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக, எஞ்சிய மக்களை மீண்டும் பிற இடங்களுக்கு, குறிப்பாக GCC நாடுகள், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து அழைத்து வருவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்கள் முயற்சிகளைத் தொடர, VBM- ன் நான்காம் கட்டம் ஜூலை 3, 2020 முதல் தொடங்கப்படுகிறது
வந்தே பாரதின் IV-ஆம் கட்டம் குறித்து ஸ்ரீவஸ்தா குறிப்பிடுகையில்., குறிப்பாக திரும்பி வருவதற்கு பதிவுசெய்த ஏராளமான இந்தியர்களைக் கொண்ட நாடுகளில் கவனம் செலுத்தும். அவர் தவிர இவை, மே 26 முதல் தொடங்கிய பட்டய விமான நடவடிக்கைகள் கடந்த வாரங்களில் நிலையான அதிகரிப்பு கண்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.