மோடி அரசு தனது தொலைபேசியைத் டாப் செய்துள்ளதாக மம்தா குற்றச்சாட்டு!
மோடி அரசாங்கம் தனது தொலைபேசியைத் ஒட்டுக்கேட்கப்படுவதாக மேற்கு வாங்க முதலவர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்!!
மோடி அரசாங்கம் தனது தொலைபேசியைத் ஒட்டுக்கேட்கப்படுவதாக மேற்கு வாங்க முதலவர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்!!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சனிக்கிழமை தனது தொலைபேசியை மோடி அரசாங்கம் வேவுபார்ப்பதாக தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலின் போது குறைந்தது இரண்டு டஜன் இந்திய ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களின் பாதுகாப்பு மீறல் குறித்து வாட்ஸ்அப் ஒப்புக் கொண்ட கருத்து குறித்து மம்தா பானர்ஜி மோடி அரசாங்கத்தை அவதூறாக பேசியதோடு, மத்திய அரசு தனது தொலைபேசிகளை ஒட்டுக்கேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பாதுகாப்பு மீறல் குறித்து அரசாங்கம் முழுமையாக அறிந்திருப்பதாக மம்தா பானர்ஜி கூறினார். "இப்போது எதுவும் பாதுகாப்பாக இல்லை, வாட்ஸ்அப் கூட இல்லை. முன்பு வாட்ஸ்அப்பை இடைமறிக்க முடியாது என்று நாங்கள் நினைத்தோம். ஆனால், இப்போது வாட்ஸ்அப்பைக் கூட விட்டுவைக்கவில்லை. இந்த விவகாரத்தை பிரதமர் விசாரிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று மம்தா பானர்ஜி கூறினார்.
அனைத்து அதிகாரத்துவவாதிகள் மற்றும் அரசியல்வாதிகள் உளவாளிகள் என்று மேற்கு வங்க முதல்வர் மேலும் கூறினார். "அனைத்து IAS/IPS அதிகாரிகள், அரசியல்வாதிகளின் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இது மத்திய அரசு மற்றும் இரண்டு மாநில அரசுகளின் உத்தரவின் பேரில் நடக்கிறது. நான் அந்த மாநிலங்களின் பெயரை குறிப்பிடமாட்டேன், ஆனால் ஒன்று இந்த இரண்டின் பாஜக ஆட்சி செய்யும் மாநிலமாகும், "என்று அவர் கூறினார்.