Sushant Suicide Case: வைரலாகும் கங்கணாவின் அறிக்கை பற்றிய Whatsapp chat!!
சுஷாந்தின் மரணத்திற்குப் பிறகு முதல் வீடியோவை வெளியிட்டு பாலிவுட்டில் நேபடிசம் பற்றிய விவாதத்தைத் தொடங்கிய கங்கணா ரனௌத் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றுள்ளார்.
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை வழக்கில் மும்பை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில், மும்பை காவல்துறை இதுவரை 35 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளது. சுஷாந்தின் மரணத்திற்குப் பிறகு முதல் வீடியோவை வெளியிட்டு பாலிவுட்டில் நேபடிசம் பற்றிய விவாதத்தைத் தொடங்கிய கங்கணா ரனௌத் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றுள்ளார். அவர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் சுஷாந்த் வழக்கில் (Sushant Suicide Case) தனது அறிக்கையை போலீசில் கொடுக்க விரும்புவதாகக் கூறினார்.
அறிக்கையை வழங்க மும்பை போலீசார் தன்னை அழைத்ததாகவும் ஆனால் தான் மனாலியில் இருப்பதாகவும், இருப்பினும் தான் அறிக்கை அளிக்க தயாராக உள்ளதாகவும் கங்கணா ரனௌத் (Kangana Ranaut) கூறியிருந்தார். தன் வாக்குமூலத்தைப் பெற யாரையாவது மனாலிக்கு அனுப்ப முடியுமா என அவர் மும்பை காவல் துறையிடம் கேட்டிருந்தார். ஆனால் அதற்கு அவருக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.
தற்போது டீம் கங்கணா வாட்ஸாப்பில் ஒரு ஸ்க்ரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். இதில், கங்கணா குறித்து, மும்பை போலீசுக்கும் (Mumbai Police) அவர் சகோதரி சந்தேலிக்கும் என்ன உரையாடல் நடந்தது என்பதைக் காண முடிகிறது.
ALSO READ: தேசத்துரோகிகளுடன் கூட்டு வேண்டாம்: Bollywood-க்கு பஜக அறிவுரை!!
இந்த ஸ்கிரீன் ஷாட் பகிரப்பட்டு, 'கங்ணாவுக்கு இதுவரை முறையான சம்மன் கிடைக்கவில்லை. கடந்த இரண்டு வாரங்களாக ரங்கோலிக்கு போலீஸ் அழைப்புகள் வருகின்றன. கங்கணா தனது அறிக்கையை பதிவு செய்ய விரும்புகிறார். ஆனால் மும்பை போலீசாரிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. ரங்கோலி மும்பை காவல்துறைக்கு அனுப்பிய செய்தி இதுதான்.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சுஷாந்திற்கு நியாயம் கிடைக்க தானும் தனது சகோதரி கங்கணாவும் தொடர்ந்து இந்த விஷயத்தில் காவல் துறைக்கு உதவ தயாராக இருப்பதாக ரங்கோலி எழுதியுள்ளார். இப்போது இந்த ஸ்கிரீன் ஷாட் சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
கங்கனா சமீபத்தில், ' என்னால் சாட்சியமளிக்க முடியாத, என்னால் நிரூபிக்க முடியாத, பொது நலனில் இல்லாத ஒன்றை நான் கூறியிருந்தால், எனது பத்மஸ்ரீயை திருப்பித் தருவேன். நான் அப்படி கூறியிருந்தால், நான் இந்த மரியாதைக்கு தகுதியற்றவள்’ என்று கூறியிருந்தார்.