மன்மோகன் சிங் இறுதி ஊர்வலம் எங்கு, எப்போது? நாளை நடைபெறுவது ஏன்?
Manmohan Singh Last Rites: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் எங்கு, எப்போது நல்லடக்கம் செய்யப்படுகிறது என்பகு குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதனை இங்கு விரிவாக காணலாம்.
Manmohan Singh Last Rites Latest News Updates: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்றிரவு (டிச. 26) டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்றிரவு உயிரிழந்தார். வயது முதிர்வு காரணமாகவும், இதய நோய் காரணமாகவும் உயிரிழந்தார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு வீட்டில் மன்மோகன் சிங் சுயநினைவை இழந்த நிலையில், அவருக்கு வீட்டிலேயே மருத்துவமனை சிகிச்சை தொடங்கப்பட்டது.
தொடர்ந்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு நேற்று இரவு 8:06 மணிக்கு கொண்டுவரப்பட்டதாகவும், இரவு 9:11 மணிக்கு அவரது உயிர்பிரிந்ததாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மன்மோகன் சிங் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து, மோதிலால் நேரு மார்க் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்றிரவே கொண்டுவரப்பட்டது.
7 நாள்கள் துக்கம் அனுசரிப்பு
தொடர்ந்து, அரசியல் தலைவர்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், இன்று அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. மன்மோகன் சிங் இறுதி ஊர்வலம் நாளை (டிச. 28) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜன.1ஆம் தேதி வரை அதாவது 7 நாள்களுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், திட்டமிடப்பட்ட அரசின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும், வேறு எந்த அரசு நிகழ்வுகளும் நடைபெறாது. இந்தியா முழுவதிலும், வெளிநாட்டில் உள்ள அனைத்து இந்திய தூதரகங்களிலும் இந்திய தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்.
இறுதி சடங்கின்போது பின்பற்றப்படும் வழிமுறைகள்
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பிற்கும், அவர் வகித்த பதவியின் கண்ணியத்திற்கும் மதிப்பளிக்கும் வகையில், அவரது இறுதி சடங்கின் போது சிறப்பு அரசு நெறிமுறை பின்பற்றப்படும். உடல் தகனம் செய்யப்படுவதற்கு முன், அவர் மீது இந்திய தேசியக் கொடியான மூவர்ணக் கொடியில் போர்த்தப்படும்.
இது தவிர, இறுதிச் சடங்கின்போது 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அவருக்கு மரியாதை வழங்கப்படும். இது மிக உயர்ந்த அரசு மரியாதையின் அடையாளமாக கருதப்படுகிறது. முன்னாள் பிரதமரின் இறுதி ஊர்வலத்தின் போது பாதுகாப்பு மற்றும் நெறிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்படும். அவரது இறுதி பயணத்தில் பொதுமக்கள் முதல் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் வரை பலரும் கலந்து கொள்வார்கள். இது தவிர, ராணுவ இசைக்குழுக்கள் மற்றும் ஆயுதப்படை வீரர்களும் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று அணிவகுப்புகளை நடத்துவார்கள்.
எங்கு நல்லடக்கம்?
டெல்லியில் உள்ள ராஜ்காட் வளாகத்தில் முன்னாள் பிரதமர்களான ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மன்மோகன் சிங்கின் உடலும் இங்கேயே நல்லடக்கம் செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், பல முன்னாள் பிரதமர்களுக்கு தனி சமாதிகளும் கட்டப்பட்டுள்ளன. இருப்பினும், இறுதி சடங்குகள் செய்யும் முறை உயிரிழந்த நபர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் நடைபெறும்.
மேலும் படிக்க | மன்மோகன் சிங் பற்றி இதுவரை அறிந்திராத 9 முக்கிய தகவல்கள்..!
வழக்கமாக, முன்னாள் பிரதமர்களின் இறுதிச் சடங்குகள் டெல்லியில் நடைபெற்றுள்ளது. ஆனால் பல சமயங்களில், சம்பந்தப்பட்ட நபரின் சொந்த மாநிலத்திலும் நடைபெற்றுள்ளது. அவர்களின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் நாட்டின் பிற முக்கிய தலைவர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
இறுதி ஊர்வலம் எப்போது?
மன்மோகன் சிங்கின் உடல் மோதிலால் சாலையில் உள்ள அவரது வீட்டில் இருந்து காங்கிரஸ் தலைமையகத்திற்கு நாளை (டிச. 28) காலை 8 மணிக்கு கொண்டுசெல்லப்படும் என்றும் அங்கு காலை 8.30 - 9.30 மணிவரை காங்கிரஸ் தொண்டர்கள் இறுதி அஞ்சலி செலுத்தலாம் என்றும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் பதிவிட்டுள்ளார்.
மேலும், மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் இருந்து இறுதி சடங்கு நடைபெறும் இடத்திற்கு காலை 9.30 மணிமுதல் இறுதி ஊர்வலம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்மோகன் சிங்கின் மூன்று மகள்களில் ஒருவர் அமெரிக்காவில் இருக்கிறார். அவர் இன்று இரவு டெல்லி வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அவரது வருகைக்கு பின்னர் நாளை காலை மன்மோகன் சிங்கின் உடல் இறுதி மரியாதைக்கு கொண்டுசெல்லப்படும் என தகவல்கள் கூறுகின்றன.
மேலும் படிக்க | மன்மோகன் சிங் நீல நிற டர்பன்... கடைசி வரை கலர் மாற்றாதது ஏன்? அவரே சொன்ன பதில்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ