மொட்டை மாடியில் இருந்து விசில் அடித்து ஒலிகளை எழுப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கு மும்பை உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளை முன்ஜாமீன் வழங்கியது. அப்போது, ​​ஒருவர் தனது வீட்டில் இருந்து விசில் அடித்ததாலேயே, பெண்ணுக்கு எதிரான பாலியல் நோக்கதுடன் தான் செய்தார் என உறுதியாக முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தன்னை நோக்கி விசில் அடித்து அண்டை வீட்டாரை சிறைக்கு அனுப்ப கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி விபா கன்கன்வாடி மற்றும் நீதிபதி அபய் வாக்சே ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒரு ஆண் பெண்ணை நோக்கி விசில் அடிப்பது என்பது பாலியல் துன்புறுத்தல் ஆகாது என கூறியது. உயர்நீதிமன்ற பெஞ்ச் ஜனவரி 5 ஆம் தேதி அளித்த தீர்ப்பில், பெண் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் (FIR) குற்றம் சாட்டப்பட்ட மூவரில் யாரும் பாலியல் நோக்கத்துடன் அவரது உடலைத் தொட்டதாகக் கூறவில்லை, எனவே இது குற்றம் இல்லை என்று கூறியது.


குற்றம் சாட்டப்பட்டவர்கள், தனது அயலவர்கள் என்றும், மொட்டை மாடியில் இருந்து விசில் அடிப்பது, பாத்திரங்களின் உதவியுடன் சத்தம் போடுவது, பலவிதமான ஒலிகளை எழுப்புவது மற்றும் வாகனத்தின் ரிவர்ஸ் ஹார்னை தொடர்ந்து ஒலிக்க செய்வது போன்ற செயல்களைச் செய்வார்கள் என்று அந்தப் பெண் குற்றம் சாட்டினார்.


மேலும் படிக்க | உயர்நீதிமன்றத்தை முறையாக பராமரிக்காதது ஏன்? தொல்லியல் துறைக்கு கண்டனம்!


முன்னதாக, சிறப்பு விசாரணை நீதிமன்றம் கடந்த நவம்பரில் இரண்டு ஆண்களுக்கும் பெண்ணுக்கும் முன்ஜாமீன் மறுத்துவிட்ட நிலையில், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ள பிரிவு 3(1)(w)(ii) யின்படி வழக்கு பதிய வேண்டும் என்றால், "பட்டியலிடப்பட்ட சாதி அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம், அத்தகைய சாதி அல்லது பழங்குடியைச் சேர்ந்தவள் என்பதை அறிந்து அவர்களிடம் பாலியல் ரீதியிலான வார்த்தைகள், செயல்கள் அல்லது சைகைகளைப் பயன்படுத்தி இருக்க வேண்டும்.


மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான 34 வயது நபர், "(அவரது) மொட்டை மாடியில் இருந்து" இதுபோன்ற செயல்களை செய்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது என்று கூறிய உயர்நீதிமன்றம் கூறியது. "இருப்பினும், அந்த செயல்கள் குறித்த விவரங்கள் இல்லை. மேலும் அவர் கடந்த காலத்தில் அவர் எந்த புகாரும் அளிக்கவில்லை என்றும் உயர்நீதிமன்றம் குறிப்பிட்டது.


எனவே, வன்கொடுமைச் சட்டத்தின் பிரிவு 18 (கைதுக்கு முன் ஜாமீன் வழங்குவதற்கான தடை) கீழ் வழக்கு பதி செய்ய இயலாது என்றும், ஐபிசியின் கீழ் தொடரப்பட்ட குற்றங்களுக்கு சிறை காவல் தேவையில்லை என்றும், விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தும் போது, தலா ரூ.15,000 ஜாமீனில் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.


மேலும் படிக்க | கொல்கத்தா நீதிமன்றத்தில் 72 ஆண்டுகளுக்கு பின் முடிவுக்கு வந்த வழக்கு!


மேலும் படிக்க | 50 வயதில் 60 வது குழந்தை; அடுத்த ரிலீஸுக்கு மனைவியை தேடும் நபர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ