கொல்கத்தா நீதிமன்றத்தில் 72 ஆண்டுகளுக்கு பின் முடிவுக்கு வந்த வழக்கு!

நாட்டில் பல ஆண்டுகள் நிலுவையில் உள்ள பழமையான வழக்குகளில் ஒன்றில் கொல்கத்தா உயர் நீதிமன்றம் இறுதியாக தீர்ப்பை வெளியிட்டுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 16, 2023, 07:47 PM IST
  • பழமையான வழக்குகளில் ஒன்றில் கொல்கத்தா உயர் நீதிமன்றம் இறுதியாக தீர்ப்பை வெளியிட்டுள்ளது.
  • 1951ம் ஆண்டு வழக்கு முதலில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தா நீதிமன்றத்தில் 72 ஆண்டுகளுக்கு பின் முடிவுக்கு வந்த வழக்கு! title=

நாட்டில் பல ஆண்டுகள் நிலுவையில் உள்ள பழமையான வழக்குகளில் ஒன்றில் கொல்கத்தா உயர் நீதிமன்றம் இறுதியாக தீர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்த வாரம், இந்தியாவின் பழமையான உயர் நீதிமன்றத்தின் நீதிமன்ற பிரிவு ஒன்று பழமையான இந்த வழக்கை முடித்து வைத்து தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா, 1951ம் ஆண்டு வழக்கு முதலில் தாக்கல் செய்யப்பட்டு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்தார் என்பது கூடுதலான சுவாரஸ்ய தகவல்.

முன்னாள் பெர்ஹாம்பூர் வங்கி லிமிடெட் கலைக்கப்பட்டது தொடர்பான வழக்கு இறுதியாக தீர்க்கப்பட்டாலும், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இன்னும் தீர்க்க வேண்டிய ஐந்து பழமையான வழக்குகளில் இரண்டை தீர்க்க வேண்டியுள்ளது. இந்த வழக்குகள் அனைத்தும் 1952-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டவை.

சென்னை உயர் நீதிமன்றம் தற்போது ஒரு வழக்கை விசாரித்து வருகிறது. மீதமுள்ள வழக்குகள் வங்காளத்தின் மால்டாவின் சிவில் நீதிமன்றங்களில் கையாளப்படும் சிவில் வழக்குகள். இந்த சர்ச்சைக்குரிய விவகாரங்களைத் தீர்க்கும் முயற்சியில், மால்டா நீதிமன்றங்கள் மார்ச் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு விசாரணைகளைத் திட்டமிட்டுள்ளன.

மேலும் படிக்க | ஜாதி பேரணிகளை ஏன் நிரந்திரமாக தடை செய்யக்கூடாது... உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்வி!

ஜனவரி 9 ஆம் தேதி நிலவரப்படி, இந்திய நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட பழமையான வழக்காக பெர்ஹாம்பூர் வழக்கை தேசிய நீதித்துறை தரவு தொகுப்பு பட்டியலிடுகிறது. ஜனவரி 1, 1951 அன்று, பெர்ஹாம்பூர் வங்கியை மூடுவதற்கான முடிவை எதிர்த்து ஒரு மனு சமர்ப்பிக்கப்பட்டது, அதே நாளில், அது "வழக்கு எண் 71/1951" என்று பதிவு செய்யப்பட்டது. இழந்த நிதியை மீட்டெடுக்கும் முயற்சியில் பெர்ஹாம்பூர் வங்கி தரப்பில் இருந்து கடனாளிகளுக்கு எதிராக பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அவர்களில் பலர் வங்கியின் நிலைப்பாட்டை எதிர்த்து நீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்கல் செய்தனர்.

வங்கியின் கலைப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த செப்டம்பரில் உயர்நீதிமன்றத்தில் இரண்டு விசாரணைகளுக்கு திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் யாரும் ஆஜராகவில்லை என்று நீதிமன்ற பதிவுகள் தெரிவிக்கின்றன.

பின்னர் நீதிபதி கபூர், நீதிமன்றத்தின் லிக்விடேட்டரிடம் அறிக்கை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். செப்டம்பர் 19 அன்று, உதவி லிக்விடேட்டர் ஆகஸ்ட் 2006 இல் இந்த விவகாரம் தீர்க்கப்பட்டதாக நீதிமன்றத்தில் அறிவித்தார். ஆனால், இது பதிவேடுகளில் சரிசெய்யப்படவில்லை என்று கண்டறியப்பட்டது. அதனால் வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதாக பட்டியலிடப்பட்டது.

முன்னதாக, நீதிபதி கபூர் இரண்டாவது பழமையான வழக்கை 23 ஆகஸ்ட் 2022 அன்று விசாரித்தார். அப்போது , ​​அனைத்து தரப்பினரையும் சந்தித்து நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்ப்பதற்கான வழிவகைகளை பரிந்துரைக்குமாறு வழக்கறிஞர் மற்றும் சிறப்பு அதிகாரிக்கு அறிவுறுத்தினார்.

மேலும் படிக்க | அன்பழகனுக்கு சிலை அமைக்க தடை கோரி வழக்கு! தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News