கொரோனா வைரஸ் காற்றில் பரவுகிறது என்பதற்கான ஆதாரம் பெருகி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது...!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகம் முழுவதும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று, மனிதர்கள் பேசும் போது, தும்மும் போது, இருமும் போது தெறிக்கும் எச்சில் துளிகள் வழியாக மற்றவர்களுக்குப் பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவித்தது. 


கொரோனா தொற்று உடையவர்கள் பயன்படுத்திய இடங்களையோ அல்லது பொருட்களையோ பயன்படுத்தினாலும் நமக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. நாம் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல், முகக்கவசம் அல்லது முகமூடி அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்றவற்றால் இந்த தொற்றைக் குறைக்க உதவும் என்று கூறப்படுகிறது.


இந்நிலையில், மூக்கு மற்றும் வாய்வழியாக உதிரும் நீர்த்துளிகளால் மட்டும் கொரோனா தொற்று பரவுவதாக கடந்த காலத்தில் உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. காற்றில் பரவுவதற்கான வாய்ப்பு குறித்து ஆதாரம் இல்லை என்றும் அந்த அமைப்பின் மூத்த விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஆனால், இந்த அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவின் தலைவரான மரியா வான் கெர்கோவே ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், காற்று வழியாகவும் கொரோனா பரவுவதற்கான சாத்தியத்தையும் தற்போது விவாதத்திற்கு ஏற்று இருப்பதாக தெரிவித்தார். 


READ | அத்தியாவசிய பொருட்களின் பட்டியலிலிருந்து முகமூடி, சானிடைசர் நீக்கம்: அரசு!


மேலும், கொரோனா வைரஸ் பரவுவது துரிதப்படுத்தப்படுவதாகவும், எதிர்காலத்தில் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. "ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், நாங்கள் ஒரு நாளைக்கு 100,000 வழக்குகளை கையாண்டோம்" என்று டாக்டர் மைக்கேல் ரியான் செவ்வாயன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். "இன்று நாங்கள் ஒரு நாளைக்கு 200,000 பாதிப்பை கையாள்கிறோம்" என்றார். 


கொரோனா பரவல் குறித்து 32 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள் கையெழுத்திட்ட திறந்த மடல் ஒன்று உலக சுகாதார அமைப்புக்கு எழுதியுள்ளனர். இதில் கொரோனா தொற்று காற்று வழியாகப் பரவுகிறது என்பதற்கான ஆதாரங்களைத் திரட்டியுள்ளனர். இவர்கள் கோரியபடி உலக சுகாதார அமைப்பு காற்று வழியாகவும் கொரோனா பரவுகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் உலகம் முழுவதும் ஓரடி சமூக இடைவெளி என்ற நிலைமையை மாற்றியமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.