`பாரத் மாதா கி ஜே` சொல்லத் தயாராக இருப்பவர்கள் மட்டுமே இங்கு வாழ முடியும்: மத்திய அமைச்சர்
நமது நாடு `தரம் ஷாலா` (திறந்த இல்லம்) ஆக வேண்டுமா? என தேசிய குடிமக்களின் பதிவேட்டை எதிர்ப்பவர்களை பார்த்து கேட்ட மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்.
புனே: கடந்த சனிக்கிழமை ஆர்.எஸ்.எஸ் (RSS) அமைப்பின் மாணவர் சங்கமான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (Akhil Bhartiya Vidyarthi Parishad) 54-வது வருடாந்திர மாநாட்டில் உரையாற்றிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பகத்சிங், சுபாஸ் சந்திரபோஸ் போன்றவர்கள் நாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் உயிரை தியாகம் செய்தனர். இப்போது நம் நாட்டை ஒரு தர்ம ஷாலாவாக (திறந்த இல்லம்) மாற்றப் போகிறோமா? அல்லது அப்படியொரு நிலைக்கு இந்தியாவை மாற்ற விட முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
உலகில் உள்ள அனைத்து நாடுகளிடம் குடிமக்கள் குறித்த சரியான கணக்கெடுப்பு உள்ளது. ஆனால் இந்தியா விடுதலை அடைந்து 70 ஆண்டுகளாகியும் சரியான குடிமக்கள் கணக்கீடு இல்லை? ஏன் இல்லை என்று சிந்திக்க வேண்டும். ஆனால் எந்தவித சிந்தனையும் செய்யாமல் தேசிய குடிமக்களின் பதிவேட்டை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் தேசிய குடிமக்களின் பதிவேட்டை நிறைவேற்றி தீருவோம் என்ற சவாலை நாம் ஏற்க வேண்டும்.
"பாரத் மாதா கி ஜே" என்று சொல்லத் தயாராக இருப்பவர்கள் மட்டுமே இங்கு வாழ முடியும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பேசினார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.