உத்தரப்பிரதேசத்தில் ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணிக்கு நிறைவடைந்த நிலையில், 2022-ம் ஆண்டு நடைபெறும் பஞ்சாப் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கருத்துக் கணிப்புகள் மீது அனைவரது பார்வையும் உள்ளது. நாட்டின் மிகப் பெரிய ஊடக நிறுவனங்களில் ஒன்றான ஜீ நியூஸ், பஞ்சாபில் நடந்த கருத்துக் கணிப்புகளின் முடிவுகளைக் கொண்டு வந்துள்ளது/ இதுவரை வெளிவந்துள்ள கருத்து கணிப்பில், ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய வெற்றியை பெரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Assembly Elections 2022: பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் வாக்குப்பதிவு தீவிரம்


ஜீ மீடியாவின் கருத்துக்கணிப்பின்படி, பஞ்சாப் முழுவதும் உள்ள 117 தொகுதிகளில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 52 - 61 இடங்களைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  வட மாநிலத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக காங்கிரஸுக்கு 26 - 33 இடங்களும், சிரோமணி அகாலி தளம் 24 - 32 இடங்களைப் பெறும் என்றும் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. இந்த கருத்து கணிப்பு முடிவில் பிஜேபி மற்றும் பிஎல்சி கூட்டணி வாக்காளர்களைக் கவர்வதில் தோல்வியடைந்தது போல் தெரிகிறது, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் இருவரும் பஞ்சாபில் 3 - 5 இடங்களை மட்டுமே பெறுவார்கள் என்று கூறுகின்றன.


புள்ளிவிவரங்களைப் பொறுத்தவரை, பெரிய மால்வா பிராந்தியத்தில் ஆம் ஆத்மி கட்சி 38 - 42 இடங்களைப் பெற்று முதல் இடத்தையும், காங்கிரஸ் 12 - 16 இடங்களுடன் இரண்டாவது இடத்தையும், எஸ்ஏடி மூன்றாவது இடத்திலும் இருக்கும். இதேபோல், பஞ்சாபின் கிராமப்புறப் பகுதி என்று கூறப்படும் மஜா பகுதியில், ஆம் ஆத்மி கட்சி 25 இடங்களில் 11-15 இடங்களைப் பெற்று அதிக வெற்றி பெரும் என்று தெரிகிறது. மஜா பிராந்தியத்தில் சிரோமணி அகாலி தளம் மற்றும் காங்கிரஸுக்கு இடையே 5-8 இடங்களில் கடும் போட்டி நிலவுகிறது.  இங்கு மஜத பகுதியில் பாஜகவுக்கு பூஜ்ஜிய இடங்களே கிடைக்க வாய்ப்புள்ளது. தோபா பகுதியைப் பொறுத்தவரை, ஆம் ஆத்மி கட்சி 23 இடங்களில் 3-5 மட்டுமே பெற்று இரண்டாவது இடத்தைப் பிடிக்கும். இந்தப் பிராந்தியத்தில் காங்கிரஸ் 9-10 இடங்களைப் பெற்று, SAD 8-10 இடங்களைப் பெற்று, அதிக மதிப்பெண் பெற்றவராக வெளிப்படும்.  


மேலும் படிக்க | "எல்லையில் சீனா.. நேருவை சுற்றி வரும் மோடி அரசு" சுற்றி வளைத்த மன்மோகன் சிங்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR