பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) சட்டப்பூர்வ உத்தரவாதம், உலக வர்த்தக அமைப்பில் இருந்து இந்தியா விலகுதல் உள்ளிட்ட புதிய கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகளின் போராட்டம் தொடங்கியது. அனைத்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர். தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் என்றால் என்ன? அதை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் ஏன் கோரிக்கை வைக்கின்றனர் என்பது தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (Free trade Agreement (FTA))


வர்த்தகங்களை எந்தவித தடைகளும் இன்றி மேற்கொள்வதற்காக சர்வதேச சட்டத்தின்படி மேற்கொள்ளப்படும் ஒப்பந்தமாகும் . இரு நாடுகளுக்கு இடையே மட்டுமல்ல, பல நாடுகளுக்கு இடையிலும் செய்யப்படுவது என தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இரண்டு வகைகள் உள்ளன.


இருதரப்பு ஒப்பந்தம் என்பது, வணிக வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்காக இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகக் கட்டுப்பாடுகளை தளர்த்த இரு நாடுகளும் ஒப்புக்கொள்ளும்போது ஏற்படும் ஒப்பந்தம் ஆகும். ஆனால் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தங்களான பல தரப்பு ஒப்பந்தத்தில் பேச்சுவார்த்தை மற்றும் செயல்பாடுகள் சற்று கடினமானவை.


விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கும் விவசாயிகள், ஏன் உலக வர்த்தக அமைப்பில் இருந்து விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டம் நடத்துகின்றனர்.


மேலும் படிக்க | மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம் ஆரம்பம் “டெல்லி சலோ”


நாடுகளுக்கு இடையிலான வர்த்தக விதிகளை கையாள்கிறது சர்வதேச வர்த்தக அமைப்பு (World Trade Organization). ஒரு நாடு, தனது நாட்டைச் சேர்ந்த விவசாயிகளுக்கு வழங்கும் ஆதரவை கட்டுப்படுத்த வேண்டும். அதிகப்படியான மானியங்கள் சர்வதேச வர்த்தகத்தை சிதைத்துவிடும் என்று WTO விதிகள் கூறுகின்றன.


எனவே, இந்தியா, உலக வர்த்தக அமைப்பில் இருந்தால், உறுப்பு நாடு என்ற வகையில் விவசாயிகளுக்கு பாதகமாக இருக்க வேண்டியிருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்திய விவசாயிகளுக்கு மானியம் வழங்குவது குறித்து பல நாடுகள் கவலை தெரிவிக்கின்றன, இது உலகளாவிய விவசாய வணிகத்தை பாதிக்கும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.


இந்தியா ஜனவரி 1995 முதல் உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினராக உள்ளது. இந்திய விவசாயிகள் MSP தொடர்பான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை விரும்புகிறார்கள், ஆனால் WTO விதிகள் இதற்கு நேர்மாறாக இருக்கின்றன. இதனால் தான் இந்தியாவும் தனது MSPயை நிர்ணயிக்க எந்த உத்தரவாதமும் அளிக்க மாட்டோம் என்று சர்வதேச வர்த்தக அமைப்பிற்கு உறுதியளித்துள்ளது. 


இதன் அடிப்படையில் தான் குறைந்தபட்ச ஆதரவு விலையான MSP தொடர்பான கோரிக்கைகளை ஏற்க, உலக வர்த்தக அமைப்பில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் என விவசாயிகள் விரும்புகின்றனர். அதுமட்டுமல்ல, பிற நாடுகள் அல்லது அமைப்பின் நிபந்தனைகளுக்கு அடிபணியாமல் இருக்க இந்தியா அனைத்து FTAக்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோருகின்றனர்.


மேலும் படிக்க - டெல்லியை நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்: இணையம், எஸ்எம்எஸ் சேவைகள் ரத்து


உலக வர்த்தகத்தில் 98 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச வர்த்தக அமைப்பில் 164 உறுப்பு நாடுகள் உள்ளன. தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) என்பது உறுப்பு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் செய்யப்படும் பொருட்களின் மீதான கட்டணங்களைக் குறைப்பது அல்லது நீக்குவதும் அடங்கும். 


இந்தியா மட்டுமல்ல, வளரும் நாடுகளும் ஒரு சிறப்பு பாதுகாப்பு பொறிமுறையை கோருகின்றன, இது விவசாய பொருளின் இறக்குமதியில் அதிகரிப்பு அல்லது அதன் விலையில் சரிவு ஏற்பட்டால், இறக்குமதி கட்டுப்பாடுகளை விதிக்க அனுமதிக்கும்.


இதனால் நாட்டில் விவசாயிகளின் வாழ்வாதாரம் பறிபோகும் நிலையும், உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலும் ஏற்படும் என வளரும் நாடுகள் அச்சம் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையிலேயே இந்திய விவசாயிகள், உலக வர்த்தக அமைப்பில் இருந்து இந்தியா விலக வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.  


மேலும் படிக்க - தேர்தல் நேரத்தில் தான் காங்கிரசுக்கு விவசாயிகள் நியாபகம் வரும்: பிரதமர் மோடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ