மணிப்பூர் வன்முறை: அரசுக்கு 24 மணி நேர கெடு.. அமைச்சர், எம்எல்ஏ-க்கள் வீடு சூறையாடல்
Why Manipur Broken Again: மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெறியாட்டம் அரங்கேறி வரும் நிலையில் அங்கு என்ன நடக்கிறது என்பதை குறித்து பார்ப்போம்.
Manipur Violence Latest Updates: மணிப்பூரில் இரண்டு இனமக்கள் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டார்கள். இரண்டு தரப்பிலும் ஆயுத ஏந்திய குழுக்களும் இருக்கின்றன. குக்கி சமூகத்திற்கும், மெய்தி சமூகத்திற்கும் இடையிலான இடஒதுக்கீடு பிரச்சனை காரணமாக இந்த வன்முறை தொடங்கியது.
மணிப்பூரில் மெய்தி, நாகா மற்றும் குக்கி என மூன்று முக்கிய சமூகங்கள் வசிக்கின்றன. மெய்தி சமுகத்தினர் பெரும்பாலும் இந்துக்களாக இருக்கிறார்கள். அதேசமயம் நாகா மற்றும் குக்கி சமுகத்தினர் பெரும்பாலும் கிறித்துவ மதத்தை பின்பற்றுகிறார்கள். இவர்கள் எஸ்டி (ST) பிரிவின் கீழ் சலுகை பெற்று வருகிறார்கள்.
மணிப்பூர் மாநிலத்தில் குறிப்பாக பள்ளத்தாக்கில் வசிப்பவர்கள் மெய்த்தி இன மக்கள். மலை மீது வசிப்பவர்கள் குக்கி இன மக்கள். இந்த குக்கி மக்களுக்கு ஏற்கனவே எஸ்டி மற்றும் பழங்குடியினர் சலுகை உள்ளது. எங்களுக்கும் இந்த சலுகை வேண்டும் என நீண்ட காலமாக மெய்த்தீ இன மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. இந்த வழக்கை விசாரித்த மணிப்பூர் உயர் நீதிமன்றம் மெய்த்தீ சமூகத்தினரை பட்டியல் பழங்குடியினர் (எஸ்டி) பிரிவில் சேர்க்க வேண்டும் என்று மாநில அரசுக்கு பரிந்துரைத்தது.
இதற்கு குக்கி இன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதைத்தொடர்ந்து போராட்டம் வெடித்தது. பிறகு வன்முறை ஆட்டம் அரங்கேறியது. இரண்டு தரப்பிலும் சேர்த்து இதுவரை சுமார் 230 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 50,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு குடிபெயர்ந்து முகாம்களில் வசித்து வருகிறார்கள்.
மணிப்பூர் வன்முறையை அடுத்து, அங்கு அமைதி திரும்பக்கோரி பல போராட்டங்களும், பேரணிகளும் நடைபெற்றன. அதன்பிறகு சற்று அமைதி திரும்பியது. ஆனால் அந்த அமைதி அதிக நாட்கள் நீடிக்கவில்லை. மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்தது.
அதற்கு முக்கியக்காரணமாக பார்க்கப்படுவது, ஆயுதம் ஏந்திய குழுக்கள் சில பேரை கடத்தி சென்று கொலை செய்த சம்பவம். இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆயுதம் ஏந்திய குழுக்களால் கடத்தப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஆறு பேரை கொலை செய்து வீசி விட்டார்கள்.
இந்த கொடூர சம்பத்தை பார்த்து மக்கள் கொந்தளித்து விட்டார்கள். இனியும் சும்மாக இருக்க முடியாது. இந்த வன்முறையை ஏன் கட்டுப்படுத்தவில்லை என போராட்டக்காரர்களின் கோபம் அரசை நோக்கி திரும்பியது. 2017 லிருந்து மணிப்பூரில் பாஜக அரசு மூன்று அமைச்சர்களின் வீடு அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. ஆறு எம்எல்ஏக்களின் வீடும் சூரையாடப்பட்டிருக்கிறது. சில வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டு உள்ளது.
மணிப்பூர் முதலமைச்சர் வீட்டை நோக்கியும் போராட்டக்காரர்கள் சென்றார்கள். உடனே அங்கே பாதுகாப்பில் இருந்த போலீசார் கண்ணீர் புகை கொண்டு வீசி அந்த போராட்டக்காரர்களை கலைத்து விட்டார்கள்.
ஆனால் போராட்டக்காரர்கள் 24 மணி நேர கெடு கொடுத்திருக்கிறார்கள். மணிப்பூர் பற்றி எரிகிறது. ஆனால் மத்திய அரசும் மாநில அரசும் எதுவும் செய்யவில்லை. 24 மணி நேரத்துக்குள்ள நீங்க பேச்சுவார்த்தை நடத்தி அமைதியை மணிப்பூர்ல கொண்டு வரவில்லை என்றால், ஆயுதம் ஏந்தி போராடும் வன்முறையில் ஈடுபடும் குழுக்களை மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்படுவதை தடுக்கவில்லை என்றால் எங்களுடைய கோபம் மேலும் அதிகரிக்கும். 24 மணி நேர கெடு நாங்கள் அரசுக்கு விடுக்கிறோம் என போராட்டக்குழு அறிவித்துள்ளது.
அமைதியாக இருந்த மணிப்பூர் மீண்டும் பற்று எரிகிறது. பிரதமர் மணிப்பூர் செல்ல வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.
பாஜாக டபுள் என்ஜின் கவர்மெண்ட் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் மணிப்பூரில் பாஜக ஆட்சி, மத்தியிலும் பாஜக ஆட்சி, இப்படி இரண்டிலும் பாஜக ஆட்சி இருந்து மணிப்பூர் பற்றி எரிகிறது. அங்கு அமைதி இல்லையே. ஏன் அமைதியை கொண்டுவர அரசு முயற்சிக்கவில்லை? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.
அதற்கு பதில் அளித்த ஆளும் கட்சியினர், 'நாங்கள் எங்களால் முடிந்த நடவடிக்கையை எடுத்து வருகிறோம். கூடிய விரைவில் மணிப்பூரில் அமைதி திரும்பும் என்று பாஜக தரப்பில் கூறப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க - மணிப்பூரில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை! நடுங்க வைக்கும் சம்பவம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ