Unlock 5.0: October 15 நம் அனைவருக்கும் ஒரு முக்கியமான நாள், ஏன் தெரியுமா?
சமூக மற்றும் மதக் கூட்டங்களுக்கு, வரவிருக்கும் பீகார் தேர்தல்களை மனதில் வைத்து மத்திய உள்துறை அமைச்சகம், புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.
புதுடில்லி: அன்லாக் 5.0 க்கான (Unlock 5.0) புதிய வழிகாட்டுதல்கள் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. அக்டோபர் 15 முதல் பல சேவைகள் மீண்டும் தொடங்குகின்றன. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் முதல் சினிமா அரங்குகள் வரை அக்டோபர் 15 முதல் சேவைகளை மீண்டும் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு (Containment Zone) வெளியே உள்ள பகுதிகளில் கூடுதல் நடவடிக்கைகளைத் தொடங்க உள்துறை அமைச்சகம் அறிவித்ததுடன், இது தொடர்பான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டது. புதிய விதிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடமிருந்து பெறப்பட்ட பின்னூட்டங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் விரிவான ஆலோசனைகளை அடிப்படையாகக் கொண்டவையாகும்.
பள்ளிகள், கல்லூரிகள் அக்டோபர் 15 திறக்கப்படலாம்
அக்டோபர் 15 ஆம் தேதி பள்ளிகளை மீண்டும் துவக்குவது கட்டாயமில்லை என்றும், அக்டோபர் 15 ஆம் தேதிக்குப் பிறகு பள்ளிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்களை படிப்படியாக மீண்டும் திறப்பது குறித்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் தங்கள் முடிவை எடுக்க முடியும் என்றும் மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன.
மாணவர்கள் பள்ளிக்கு வரலாம், ஆனால் அவர்களுக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் எழுத்துப்பூர்வ அனுமதி தேவைப்படும் என்று உள்துறை அமைச்சகம் (MHA) கூறியது. அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, உயர் கல்வி நிறுவனங்கள், சோதனை மற்றும் ஆய்வக வேலை தேவைப்படும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஸ்ட்ரீம்களில் பி.எச்.டி மற்றும் பி.ஜி மாணவர்களுக்கு மட்டுமே மீண்டும் திறக்க முடியும்.
தமிழகத்தில் பள்ளிகள்
தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்து இன்னும் உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. செவ்வாயன்று இது குறித்து பேசிய தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் ஆரோக்கியமும், உடல் நலனும்தான் முக்கியம். முதல்வருடனும் பிற நிபுணர்களுடனும் ஆலோசனை செய்த பிறகுதான் பள்ளிகள் திறப்பது குறித்த முடிவு எடுக்கப்படும் என்றார்.
டெல்லி-என்.சி.ஆரில் உள்ள பள்ளிகள்
கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு தில்லி அரசு அக்டோபர் 31 ஆம் தேதி வரை பள்ளிகளை திறக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளது.
தேசிய தலைநகர் பகுதியில், (NCR) ஒரு சில பள்ளிகள் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதலைப் பெற தன்னார்வ அடிப்படையில் வர மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
ALSO READ: Corona தகர்க்க முடியாத கோட்டையாக இருக்கும் இந்த UT-ல் 11000 மாணவர்கள் back to school!!
திரை அரங்குகள் அக்டோபர் 15 இல் மீண்டும் திறக்கப்படுகின்றன
மத்திய அரசின் உத்தரவின் பேரில் அக்டோபர் 15 முதல் சினிமா அரங்குகள், தியேட்டர்கள் மற்றும் மல்டிபிளெக்ஸ் மீண்டும் திறக்கப்படும் என்று I&B அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் (Prakash Javdekar) செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். மார்ச் முதல் மூடப்பட்டிருக்கும் திரை அரங்குகள், தியேட்டர்கள், மல்டிபிளெக்ஸ், அவற்றின் இருக்கை திறனில் 50 சதவீதம் என்ற அனுமதியுடனும் ஒரு இருக்கை விட்டு மற்றொரு இருக்கையில் அமரும் ஏற்பாட்டுடனும் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும். இதற்கான SOP தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் வழங்கப்படும்.
சமூக, மத கூட்டங்கள்
சமூக அல்லது மதக் கூட்டங்களுக்கு, வரவிருக்கும் பீகார் தேர்தல்களை மனதில் வைத்து மத்திய உள்துறை அமைச்சகம், புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. இப்போது சமூக, கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார, மத, அரசியல் செயல்பாடுகள் மற்றும் பிற கூட்டங்களில், தேர்தல் நடைபெற வேண்டிய இடங்களில் மட்டும், அவை கட்டுப்பாட்டு மண்டலங்களாக இல்லாத பட்சத்தில், இப்போது இருக்கும் 100 நபர்கள் என்ற அளவைக் காட்டிலும் அதிகமாக அனுமதிக்கப்படலாம்.
இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் 78,524 பேர் COVID-19 தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டார்கள். 971 இறப்புகள் ஏற்பட்டன. இந்தியாவில் மொத்தமாக COVID-19-ஆல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68,35,655 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு எண்ணிக்கை 1,05,526 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 58,27,704 ஆகவும் உள்ளன.
ALSO READ: COVID Alert: காற்றிலும் கலந்துள்ளது கொரோனா, Mask முக்கியம், இடைவெளி மிக அவசியம்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR