Kerala News: கடந்த மாதம் 25 ஆம் தேதி இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டரில் தன் பெண் தோழியை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். போக்குவரத்து விதியை அவர் மீறியதால் சிக்னல் அருகே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் அவருக்கு அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹெல்மெட் அணியாமல் அவர் பயணித்த புகைப்படத்துடன், போக்குவரத்து போலீசார் ஸ்கூட்டர் நம்பரை வைத்து அதன் உரிமையாளரின் அபராதம் குறித்து செல்போனுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளனர். அங்கு தான் சிக்கலே ஏற்பட்டுள்ளது. ஸ்கூட்டர் அந்த நபரின் மனைவி பெயரில் இருப்பதால், மனைவியின் நம்பருக்கு தான் மெசேஜ் சென்றுள்ளது.


மேலும் படிக்க - Viral Video : தனது பைக்கில் ஏற மறுத்த ஏரியா பெண்ணை கொடூரமாக தாக்கிய நபர்


இதனையடுத்து மனைவி இந்த சம்பவம் குறித்து கணவரிடம் கேட்டுள்ளார். அதற்கு தன் பின்னால் அமர்ந்திருந்த பெண் யார் என தனக்கு தெரியாது என்றும், வழியில் லிப்ட் கேட்டவர் என்றும் கூறி சமாளித்துள்ளார். ஆனால் மனைவி விடுவதாய் இல்லை. இது மிகப்பெரிய வாக்குவாதமாக மாறியுள்ளது.


அதன் தொடர்ச்சியாக அந்த நபரின் மனைவி, காவல் நிலையத்தில் தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாக புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். உண்மையிலேயே அவர் லிப்ட் தான் கொடுத்தாரா அல்லது அந்தப் பெண் அவரின் பெண் தோழியா என்பது பற்றி உண்மையான தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஒரு சின்ன சிசிடிவி ஒரு குடும்பத்தையே பிரித்துள்ளது ரகசிய பெண் தோழிகள் வைத்திருக்கும் நபர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க - மதுபோதையில் கொடூரத் தாக்குதல் வைரலாகும் சிசிடிவிகாட்சி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ