கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலில் மண்டி தொகுதியில் நடிகை கங்கனா ரனாவத் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்பியாக தேர்வாகி உள்ளார். இந்நிலையில் மண்டி மக்களவை தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட கின்னவுரை சேர்ந்த லயக் ராம் நெகி என்ற நபர் தனது வேட்பு மனு தவறாக நிராகரிக்கப்பட்டதாக கூறி மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் அந்த தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார். இது தொடர்பாக கங்கனா ரணாவத்துக்கு ஹிமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நீதிபதி ஜோத்ஸ்னா ரேவால் பிறப்பித்துள்ள இந்த நோட்டிஸிற்கு வரும் ஆகஸ்ட் 21ம் தேதிக்குள் கங்கனா ரனாவத் பதில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | எந்த மாநிலத்தையும் புறக்கணிக்கவில்லை! அமைச்சர் நிர்மலா சீதாராமன்



நடந்து முடிந்த மண்டி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங்கை 74,755 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் பாஜகவை சேர்ந்த கங்கனா ரனாவத். காங்கிரஸ் வேட்பாளர் சிங் 4,62,267 வாக்குகள் பெற்றார், அதே சமயம் கங்கனா ரனாவத் 5,37,002 வாக்குகளை பெற்றார். வழக்கு தொடர்ந்துள்ள கின்னவுரை சேர்ந்த லயக் ராம் நெகி வனத்துறையில் முன்னாள் பணியாளராக வேலை பார்த்துள்ளார். தனக்கு முன்கூட்டியே ஓய்வு கிடைத்ததாகவும், தேர்தலில் போட்டியிட தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்பித்ததாகவும், ஆனால் தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி தவறாக நிராகரித்ததாக குற்றம் சாட்டி உள்ளார்.



மேலும் தன் துறை சார்ந்த எந்த நிலுவையும் இல்லை என்பதற்கான சான்றிதழை கூட சமர்பித்ததாக கூறியுள்ளார். ஆனால் தேர்தல் அதிகாரி மின்சாரம், குடிநீர், தொலைபேசி ஆகிய துறைகளில் இருந்தும் நிலுவை சான்றிதழ் சமர்ப்பிக்க சொன்னார். கடைசி தேதிக்கு முன்னரே அனைத்து சான்றிதழ்களை சமர்ப்பித்த போதிலும் ​​தேர்தல் நடத்தும் அலுவலர் அவற்றை ஏற்காமல் எனது வேட்புமனுவை நிராகரித்தார் என்று குற்றம் சாட்டி உள்ளார். தனது ஆவணங்களை ஏற்றுக்கொள்ளப்பட்டு தான் தேர்தலில் போட்டியிட்டு இருந்தால் வெற்றி பெற்று இருப்பேன் என்று தனது மனுவில் தெரிவித்துள்ளார். எனவே இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியுள்ளார். 


மேலும் படிக்க | Budget 2024: மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் கட்டணத்தில் 50% சலுகையா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ