சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில்  சரிவு ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இன்று  கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு $92 ஆக உள்ளது. ஆனால் இன்றும் நாட்டில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏதும் இல்லை. கடந்த மே 21ம் தேதி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. இதையடுத்து, நாடு முழுவதும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50 என்ற அளவிலும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 என்ற அளவிலும் குறைந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெட்ரோல் டீசம் விலை குறைப்பு குறித்து கருத்து தெரிவித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் உள்ள நிலையில், அவை மீண்டு வர இன்னும் கால அவகாசம் தேவை என்றும் கூறியுள்ளார். கடந்த ஒரு வாரமாக கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால், பெட்ரோல் டீசல் விலை குறையுமா என்ற கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதில் அளித்தார். அவரது பதிலில் இருந்து, HPCL, BPCL மற்றும் IOCL போன்ற எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், உடனடியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது.


மேலும் படிக்க |  iphone தயாரிக்கும் முயற்சியில் டாடா குழுமம்... விஸ்ட்ரானுடன் பேச்சுவார்த்தை!


எனினும், வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை 2 முதல் 3 ரூபாய் வரை குறையும் என நிபுணர்கள் கூறுகின்றனர். முன்னதாக பிப்ரவரியில், கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு சுமார் $ 90  என்ற அளவில் இருந்தது, இது ஜூன் மாதத்தில் ஒரு பேரலுக்கு $ 125 என்ற அளவை எட்டியது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் தற்போது பேரலுக்கு 92.84 டாலராக உள்ளது.


நாட்டில் பல்வேறு நகரங்களில் பெட்ரோல் விலை நிலவரம்:


டெல்லி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.96.72, டீசல் லிட்டருக்கு ரூ.89.62


மும்பை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.111.35 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.97.28


சென்னை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 மற்றும் டீசல் லிட்டருக்கு  ரூ.94.24


கொல்கத்தா பெட்ரோல் லிட்டருக்கு ரூ.106.03 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.92.76


பெங்களூருவில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101.94 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.87.89


திருவனந்தபுரத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.107.71 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.96.52


ஹைதராபாத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.109.66, டீசல் விலை லிட்டருக்கு ரூ.97.82


போர்ட் பிளேரில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ 84.10 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ 79.74


பாட்னாவில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.107.24 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.94.04


குருகிராமில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.97.18 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.90.05


நொய்டாவில் பெட்ரோல்லிட்டருக்கு  ரூ.96.57 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.89.96


லக்னோவில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.96.57 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.89.76


ஜெய்ப்பூரில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.108.48, டீசல் லிட்டருக்கு ரூ.93.72


புவனேஸ்வரில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.103.19 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.94.76


சண்டிகரில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.96.20 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.84.26


மேலும் படிக்க |  Watch Video: கர்தவ்யா பாதையாக மாறும் தில்லி ராஜ பாதை; பிரம்மிக்க வைக்கும் காட்சி!


மேலும் படிக்க | NRI Remittances மற்றும் கிரெடிட் வளர்ச்சியில் அதிகரிப்பை காணும் பெடெரல் வங்கி 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ