தெலங்கான தேர்தல்; ஆட்சியை பிடிப்பாரா சந்திரசேகர ராவ்...
119 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட தெலங்கானாவில் 1,821 வேட்பாளர்களுக்கு இடையே நடைப்பெற்ற போட்டியின் முடிவுகள் eciresults.nic.in என்ற தளத்தில் இன்று வெளியாகிறது!
119 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட தெலங்கானாவில் 1,821 வேட்பாளர்களுக்கு இடையே நடைப்பெற்ற போட்டியின் முடிவுகள் eciresults.nic.in என்ற தளத்தில் இன்று வெளியாகிறது!
கடந்த டிசம்பர் 7-ஆம் நாள் தெலங்கானாவில் நடைப்பெற்ற தேர்தலில் 73.20% வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகள் இன்று 43 மையங்களில் எண்ணப்படுகிறது. தேர்தலுக்கு பிந்தயை கருத்துகணிப்புகள் தெலங்கானாவில் மீண்டும் சந்திரசேகர ராவ்-ன் ராஷ்டிரிய சமிதி கட்சியே ஆட்சி பிடிக்கும் என கணித்துள்ளன.
எனினும் காங்கிரஸ் - தெலுங்கு தேச கூட்டணியான பிரஜகூட்டணி, இந்த இளம் மாநிலத்தில் ஆட்சியை பிடிப்போம் என தெரிவித்து வருகின்றனர்.
ஆந்திராவில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணியில் இருந்த பாஜக, தற்போது தெலங்கானாவில் தனித்து போட்டியிட்டு தனது பலத்தை நிரூபிக்க காத்துள்ளது. எனினும் தென்னிந்தியாவை பொருத்தமட்டில் பாஜக ஒரு வடநாட்டு கட்சியாகவே பார்க்கப்படுவதால் தனித்து போட்டியிட்டு வெற்றிப்பெறுவது என்பது கேள்விக்கிடமான விஷயமாக அமைந்துள்ளது. இருப்பினும் கனிசமான தொகுதிகளை பாஜக வெல்லும் பட்சத்தில், கூட்டணி ஆட்சி அமைக்கும் திட்டத்தில் பாஜக காரியங்களை முன்னெடுத்து வருகின்றது.
அசதுத்தீன் ஒவைசி தலைமையிலான ஆல் இந்தியா மஸ்ஜிதே இத்தஹாதுல் முஸ்லிமீன் கட்சி, ஏற்கனவே சந்திரசேகர ராவ் தலைமையிலான TRS கட்சிக்கு தங்களது ஆதரவினை அளிப்பதாக அறிவித்துள்ளது. ஆல் இந்தியா மஸ்ஜிதே இத்தஹாதுல் முஸ்லிமீன் கட்சி வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்ட போதிலும் வரும் ஆட்சியில் பிரதாண இடத்தை வகிக்கும் என்பதில் ஐயம் இல்லை.
தெலங்கானா தேர்தலில் சந்திரசேகர ராவ் தவிர, தெலங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் நலமாடா உத்தண்ட் குமார் ரெட்டி, தெலங்கானா ஜன சமித்தி நிறுவனர் கோதாண்ட ராமன் ஆகியோர் முக்கிய வேட்பாளராக பார்க்கப்படுகின்றனர.
தெலுங்கானா சட்டமன்ற தேர்தலை பொறுத்தமட்டில், முதல்வராக இருந்த தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் தலைவர் சந்திரசேகர ராவ் சட்டசபையை முன்கூட்டியே கலைத்துவிட்டு தேர்தலை எதிர்கொண்டார். அடுத்தாண்டு பொதுத்தேர்தல் வரும் நிலையில், பொதுத்தேர்தல் எந்தவிதத்திலும் மாநில தேர்தலை பாதித்துவிட கூடாது என 8 மாதங்களுக்கு முன்னரே ஆட்சியை கலைத்தார். இன்று வெளியாகும் மக்களின் தீர்ப்பு அவருக்கு ஆதரவாய் அமையும் பட்சத்தில், சந்திரசேகர ராவ் யுக்தி பளித்தது என எடுத்துக்கொள்ளலாம்...