2024-ம் ஆண்டுக்குள் சட்ட விரோதமாக  குடியிருப்பவர்கள் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என அமித்ஷா கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜார்க்கண்டில் 5 கட்ட தேர்தலில் கடந்த 30ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்து, இரண்டாம் கட்ட தேர்தல் வரும் வெள்ளிக்கிழமை நடக்கவிருக்கிறது. அந்த வகையில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் பாஜக தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அதில், 


2024 ஆம்  ஆண்டுக்குள் சட்ட விரோதமாக  குடியிருப்பவர்கள் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். மேலும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பு நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கான கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படும். அதன்பின்னர் இந்தியாவுக்குள் ஊடுருவிய ஒவ்வொருவரும் அடையாளம் காணப்பட்டு வெளியேற்றப்படுவார்கள்.


ஜார்கண்ட் தேர்தலில் வளர்ச்சி உள்ளிட்ட உள்ளூர் பிரச்சினைகளுடன் நக்சலைட்டுகள் மற்றும் பயங்கரவாதத்தை ஒழித்தது, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது போன்ற தேசிய பிரச்சினைகளும் முக்கிய இடம் பெறும். 5 வருடங்களில் நரேந்திர மோடி அரசும், இந்த மாநில அரசும் நக்சலைட்களை ஒழித்துள்ளன. மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாதை வகுத்துள்ளனர்.


ராகுல் காந்தியும் இங்கு வந்துள்ளார். காங்கிரஸ் அரசாங்கங்கள் தங்கள் ஆட்சியின் 55 ஆண்டுகளில் ஜார்கண்டிற்காக என்ன செய்தன என்பது குறித்து ஒரு கணக்கைக் கொடுக்குமாறு நான் அவருக்கு சவால் விடுகிறேன். நாங்கள் ஐந்து ஆண்டுகளில் செய்ததைப் பற்றிய கணக்கையும் தருவோம் என் கூறினார்.