புது டெல்லி: ஜார்க்கண்ட் (Jharkhand) மாநிலத்தில் உள்ள 81 இடங்களுக்கான சட்டசபை தேர்தலின் (Assembly Elections) முதல் கட்ட வாக்குப்பதிவு 13 இடங்களுக்கு இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இந்த 13 இடங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவு காலை முதல் மாலை வரை அமைதியாக நடந்து முடிந்தது. முதல் கட்ட வாக்குப்பதிவில் 62.87 சதவீத வாக்குகள் (voting) பதிவாகின. வாக்குபதிவு பிற்பகல் 3 மணிக்கு முடிவடைந்தன என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு (First Phase of Polling) காலை 7 மணியளவில் தொடங்கியது. முதல் கட்டமாக, சத்ரா, கும்லா, பிஷுன்பூர், லோஹர்டாகா, மணிகா, லதேஹர், பங்கி, டால்ட்கஞ்ச், பிஷ்ராம்பூர், சத்தர்பூர், ஹுசைனாபாத், கார்வா மற்றும் பவநாத்பூர் ஆகிய இடங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இருப்பினும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லதேஹரில் உள்ள இரண்டு வாக்குச் சாவடிகளில் வாக்களிப்பு தாமதமானது.
கும்லா மாவட்டத்தில் பிஷ்ணுபூரில் ஒரு பாலத்தில் நக்சல்ஸ் குண்டு வெடி தாக்குதல் நடத்தினர். ஆனால் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. துணை ஆணையர் சஷி ரஞ்சன் கூறுகையில், நக்சல்கள் எந்த வகையிலும் வாக்களிப்பதை தடுக்க முடியவில்லை எனக் கூறினார்.
Electronic Voting Machines (EVMs) & VVPATs being packed at a polling booth in Lohardaga, as voting for the first phase of #JharkhandAssemblyPolls concludes. pic.twitter.com/e5mKgrXXO1
— ANI (@ANI) November 30, 2019
முதல் கட்டமாக 4,892 சாவடிகளில், 4,585 கிராமப்புறங்களிலும், 307 நகர்ப்புறங்களிலும் அமைந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முதல் கட்டத்தில், 1,262 சாவடிகளில் வெப்காஸ்டிங் (Webcasting) வசதி வழங்கப்பட்டது. பாலமு, லதேஹர், சத்ரா, லோஹத்ரா, கும்லா உள்ள 13 சட்டமன்ற (13 Seats) இடங்களுக்கு 190 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இன்று முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) ட்விட்டர் மூலம், ஜார்க்கண்ட் மக்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்திக்கொள்ளவும், ஜனநாயக விழாவில் அதிக எண்ணிக்கையில் பங்கேற்கவும் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபார் தாஸும் (Raghubar Das), "மக்கள் வெளியே வந்து அதிக அளவில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். அவர், "அனைவரையும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். உங்கள் ஒரு வாக்கு மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கியமானது" என்று அவர் கூறினார்.
இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் 7 ஆம் தேதி மாநிலத்தின் 20 தொகுதிகளில் நடைபெற உள்ளது. 81 தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தல் (Jharkhand Assembly election 2019) நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை ஐந்து கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவின் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 23 அன்று நடைபெற உள்ளது.
ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் 6, ஜேஎம்எம் 4, ஆர்ஜேடி 3 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. பாஜக 12 தொகுதிகளிலும் ஹூசைனியாபாத்தில் வினோத்குமார் சிங்கை ஆதரித்தும் களத்தில் நிற்கிறது. பா.ஜ.க. தனித்தும், காங்கிரஸ் கட்சி ஜார்க்கண்ட் முன்னேற்ற முன்னணி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் போட்டியிடுகின்றன.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.