நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.. ஆரம்பமே அதிரடி!
Parliament Winter Session Begins Today: குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. குளிரையும் மீறி அனல் பறக்கும்.. காத்திருக்கும் அரசியல் தலைவர்கள்.
Winter Session of Parliament Latest Updates: பரபரப்பான சூழல் மற்றும் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. நேற்று முன் தினம் தான் மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகியது. இந்த நிலையில் இன்று கூட இருக்கின்ற குளிர்கால கூட்டத்தொடர் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இன்று கூடும் இந்த குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 20 ஆம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் சிறப்பு என்னவென்று பார்த்தால், சுமார் 16க்கும் மேற்பட்ட மசோதாக்களை நிறைவேற்ற நடப்பு கூட்டத்தொடரிலே மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. அதில் குறிப்பாக வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.
மேலும் ஐந்து புதிய மசோதாக்களை கொண்டு வந்து நிறைவேற்றவும் மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. குறிப்பாக கப்பல் மசோதா, கடலோர மசோதா துறைமுகங்கள் திருத்த மசோதா, பஞ்சாப் மாவட்ட நீதிமன்றங்கள் திருத்த மசோதா உள்ளிட்ட ஐந்து புதிய மசோதாக்களை கொண்டு வந்து நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது.
இவைத் தவிர ஏற்கனவே கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்டு நிலுவையில் இருக்கக்கூடிய பல்வேறு முக்கிய மசோதாக்களையும் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. வங்கிகள் சட்ட திருத்த மசோதா விமானங்கள் திருத்த மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.
இந்த ஒரே நாடு தேர்தல் தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தன்னுடைய அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறார் இது தொடர்பான மசோதா இந்த கூட்டத்தொடரில் கொண்டுவரப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. இருப்பினும் இது தொடர்பான ஒரு விவாதம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது அதாவது குறுகிய கால விவாதமாகவோ அல்லது முழுநேர விவாதமாகவோ நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது
எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை கடந்த வாரம் முழுவதும் ஒரே பரபரப்பாக இருந்த தொழிலதிபர் கௌதம் அதானிக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் பிடிவாரன் பிறப்பிக்கப்பட்டிருப்பது. நிதி முறைகேட்டில் அவருக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து விவாதிக்க வேண்டுமென எதிர்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த கௌதம் அதானி விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டவரும் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். எனவே எதிர்கட்சிகளை பொறுத்தவரை மணிப்பூர் விவகாரம், கௌதம் அதானி விவகாரம், வேலையில்லா திண்டாட்டம் என பல்வேறு முக்கிய பிரச்சனைகள் எழுப்ப திட்டமிட்டிருக்கிறார்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரை இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக தாக்கப்படுவது, அதேபோல தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள பல்வேறு திட்டங்களுக்கு விரைவாக நிதி ஒதுக்க வேண்டும் என்ற உள்ளிட்ட தமிழகம் சார்ந்த பல்வேறு முக்கிய பிரச்சனைகளை எழுப்ப திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இந்த கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டுமென நேற்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அரசு கோரிக்கை விடுத்திருக்கிறது. அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க - மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சர் யார்? ஒரு முதல்வர், 2 துணை முதல்வர்கள் ஃபார்முலா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ