Woman Dragged By Delhi Metro Train: டெல்லியைச் சேர்ந்த 35 வயதாகும் ரீனா தனது 11 வயது மகனுடன் மெட்ரோவில் பயணித்துள்ளார். அப்போது இந்தர்லோக் மெட்ரோவில் இருந்து இறங்கிய போது கதவுகள் மூடியுள்ளது. அதில் ரீனாவின் புடவை சிக்கியுள்ளது. மெட்ரோ ரயில் அந்த ஸ்டேஷனில் இருந்து கிளம்பியதால், புடவையுடன் ரீனா சில மீட்டர் இழுத்துச் செல்லப்பட்டார். அதன்பிறகு மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் விழுந்துள்ளார். அதன்பின்னும் அவர் தொடர்ந்து இழுத்துச் செல்லப்பட்டு உள்ளார். அதன்பிறகு ரயில் சிறிது தூரம் சென்றபின் நின்றுள்ளது. உடனடியாக அவரை மீட்ட மெட்ரோ ரயில் ஊழியர்கள் சப்தர்ஜங் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சம்பவம் குறித்து இந்தர்லோக் மெட்ரோ நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், "ஸ்டேஷனுக்கு மெட்ரோ ரயில் வந்ததும், ரீனா ஏறியுள்ளார். அப்போது அவருடன் வந்த அவரது மகன் கூட்ட நெரிச்சல் காரணமாக மெட்ரோ ஏற முடியாமல் வெளியே நின்றுள்ளார். அதனால் ரீனா மீண்டும் மெட்ரோ ரயிலில் இருந்து வெளியே வரும்போது மெட்ரோ ரயிலின் கதவுகள் மூடிக்கொண்டது. அந்த சமயத்தில் ரீனாவின் புடவை கதவுகளுக்கு இடையே டைட்டாக சிக்கியுள்ளது. ரயில் புறப்பட்டதும், புடவையுடன் அவர் சில மீட்டர் இழுத்துச் செல்லப்பட்டு உள்ளார். அதன்பிறகு ரயில் தண்டவாளத்தில் விழுந்துள்ளார். அப்போதும் ரயில் நிற்காததால், மேலும் சில மீட்டர் இழுத்துச் செல்லப்பட்டு உள்ளார். இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக கூறியுள்ளனர். மேலும் அங்கிருத்த சிசிடிவி வீடியோவை பகிர்ந்து உள்ளனர்.


மேலும் படிக்க - “அவன வெட்டுங்க” ரகசிய காதலனை வெட்டிவீச சொன்ன காதலி! பொன்னேரியில் நடந்த கொடூரம்!


முதலில் அவரை அருகில் இருந்த ஒரு மருத்துவமனைக்கு தான் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு வெண்டிலேட்டர் வசதி இல்லாததால், சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவருக்கு சிகிச்சையை தொடங்கும் போதே அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் சிகிச்சை பலனில்லாமல் கடந்த சனிக்கிழமை ரீனா உயிரிழந்தார். 


ரீனாவின் கணவர் கடந்த 2014 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார். அதன் பிறகு தனியாக தனது இரண்டு குழந்தைகளையும் காய்கறி விற்று படிக்க வைத்து வந்துள்ளார். தற்போது இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யலாமா என்பது குறித்து சட்ட ஆலோசனையை போலீசார் பெற்று வருகின்றனர். 


மெட்ரோவில் பொதுவாக பாதுகாப்பு எச்சரிக்கை பலமாக இருக்கும் சூழலில் புடவை மாட்டியதும், உடனடியாக கதவுகள் திறக்கபடாதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதோடு ரீனாவின் குழந்தைகளின் கல்விச்செலவை மெட்ரோ நிர்வாகம் தான் ஏற்க வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் படிக்க - சினிமாவை மிஞ்சிய கொடூர சைக்கோ! 7 பெண்கள் கொலை..! தோண்டத்தோண்ட சடலங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ