ஹரியானா: இந்த நவீன யுகத்தில் வரம் மற்றும் சாபமாக கருதப்படுவது ஸ்மார்ட்போன்கள் தான்.தவழும் குழந்தைகள் முதல் தள்ளாடும் முதியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.  குழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறூட்டிய காலம் போய் இப்பொழுது ஸ்மார்ட்போனில் விதவிதமான பொம்மை படங்கள் காமித்து சோறூட்டும் காலம் வந்துவிட்டது. இந்த கால நவீன குழந்தைகள் அவர்களுக்கு வேண்டிய கேம்கள் பொம்மை படங்கள் தாங்களே ஸ்மார்ட்போன்களில் தேடி எடுத்து விடுகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் சிறுவர்கள் இளைஞர்கள் என அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியதால் அனைவரது கையிலும் ஸ்மார்ட்போன்கள் தான் தவழ்ந்து விளையாடுகின்றது.  ஸ்மார்ட்போன்களினால் நன்மைகள் இருந்தாலும் தீமைகளே அதிக அளவில் உள்ளது.  செல்போன்களை காதில் வைத்துக்கொண்டு பேசத் தொடங்கிவிட்டால் எதிரில் என்ன நடக்கிறது என்பதுகூட தெரியாமல் தன்னிலை மறந்து நிறைய பேர் திரிகின்றனர். அதிலும் குறிப்பாக சாலைகளில் பலரும் செல்போனில் பேசிக்கொண்டே சென்று விபத்துக்களில் சிக்கி கொள்கின்றனர்.


அந்த வகையில் ஹரியானா மாநிலத்தின் பரீதாபாத் நகரில் பெண் ஒருவர் தனது இடுப்பில் குழந்தையுடன் செல்போனில் பேசியபடியே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு ஏற்கனவே தோண்டப்பட்டிருந்த குழி ஒன்று இருந்ததை கவனிக்காமல் குழந்தையுடன் குழிக்குள் விழுந்து விட்டார்.   ஆனால் அங்கு மக்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் விதமாக அந்த குழியின் முன்பு ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இருப்பினும் அந்தப் பெண்ணோ அறிவிப்புப் பலகையையும் கவனிக்காமல்,குழியையும் கவனிக்காமல் செல்போன் பேசும் மோகத்தில் கைக்குழந்தையுடன் குழிக்குள் தவறிவிட்டார். இதையடுத்து அப்பகுதியில் இருந்த மக்கள் துரிதமாக செயல்பட்டு தாய் மற்றும் குழந்தையை காப்பாற்றினர் .


 



இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை கண்ட பலரும் அந்த பெண்ணை வசைபாடி வருகின்றனர். பெண்கள் அதுவும் குறிப்பாக தாய்மார்கள் கைக்குழந்தையுடன் செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். ஒரு பக்கம் குழியை மூடாதவர்கள் மீது குறை சொன்னாலும் சரியாக பார்த்து செல்ல வேண்டியது நம்முடைய கடமை என்பதையும் நாம் மறவாதிருக்க வேண்டும்.


ALSO READ கேரளாவில் மனைவியை பாம்பை விட்டு கடிக்க வைத்த கணவன்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR