மகாராஷ்டிராவின் பன்வேலில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வந்தாலும், பெண்கலுக்கு அதிரான குற்ற சம்பவங்கள் குறைந்த பாடில்லை. COVID-19 பாசிட்டிவ் என சோதனை செய்யப்பட்ட நாற்பது வயது பெண், பன்வெலில் உள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


ANI-யுடன் பேசிய பன்வெல் மண்டலம்-2, ACP ரவீந்திர கீதே கூறுகையில்... “தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் அனுமதிக்கப்பட்ட சில கோவிட் -19 நேர்மறை மற்றும் சந்தேகத்திற்கிடமான நோயாளிகள் உள்ளனர். இதுவரை அங்கு சுமார் 400 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்கு அனுமதிக்கப்பட்டவர்களில் ஒரு பெண்மணியும், ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து நாங்கள் அறிந்த பிறகு, நாங்கள் சம்பவ இடத்தை அடைந்து குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்தோம்.


READ | PIC: மடியில் காதலி நடாசா.... கையில் குழந்தையை வைத்து கொஞ்சும் ஹர்திக் பாண்ட்யா!! 


இந்த சம்பவம் குறித்து பாஜக, அரசாங்கத்தை அவதூறாக பேசியது, இது தவறான நிர்வாகம் என்று குற்றம் சாட்டியது. "மகாராஷ்டிரா அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? அவற்றின் தவறான நிர்வாகம் மற்றும் அலட்சியம் காரணமாக இவை நடக்கின்றன. சில தனிமைப்படுத்தப்பட்ட மையங்களும் சரியான நேரத்தில் உணவு வழங்கவில்லை" என்று பாஜக தலைவர் ராம் கதம் கூறினார்.