இஸ்லாமியர்களின் ஹஜ் மானியம் கமிட்டி 2018 முதல் 2022–ம் ஆண்டு வரை பின்பற்ற வேண்டிய ஹஜ் கொள்கைகளில் செய்யப்பட வேண்டிய மாற்றம் குறித்த பரிந்துரைகளை அறிக்கையாக உருவாக்கி உள்ளது. ஹஜ் கொள்கைகள் சீராய்வு கமிட்டி தங்கள் பரிந்துரைகளை அரசுக்கு சமர்ப்பிக்கும் விழா நேற்று மும்பை சி.எஸ்.டி.யில் உள்ள ஹஜ் ஹவுசில் நடந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இஸ்லாமியர்களின் புனித ஹஜ் பயணத்துக்கு மத்திய அரசு மானியம் அளித்து வருகிறது. 2012-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு, ‘ஹஜ் மானியத்தை நிறுத்த வேண்டும். அந்த நிதியை இஸ்லாமியர் மேம்பாட்டுக்கு வேறு விதங்களில் பயன்படுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தது. இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். சீராய்வு கமிட்டியின் முக்கிய பரிந்துரைகள் பின்வருமாறு:-


* இந்தக் குழுவானது ஹஜ் பயணத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை இஸ்லாமியர் கல்வி மேம்பாட்டுக்கு ஒதுக்கப் பரிந்துரை செய்துள்ளது.


* 45 வயதைக் கடந்த பெண்கள், ரத்த உறவு துணை இல்லாமலேயே நான்கு அல்லது அதற்கு மேலாகச் சேர்ந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியும்.


* ஹஜ் செலவைக் குறைக்க விமானப் போக்குவரத்துக்குப் பதில் கப்பல் போக்குவரத்தை ஊக்குவிப்பது.


* இந்தியாவில் 21 இடங்களில் இருந்து ஹஜ் பயணிகள் அழைத்து செல்லப்பட்டு வந்தனர். இது 9 இடங்களாக குறைக்கப்பட உள்ளது.


உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை ஹஜ் கொள்கை சீராய்வு கமிட்டி செய்துள்ளது.