இனி டெல்லி மெட்ரோவில் கத்தி எடுத்து செல்ல அனுமதி
மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) டெல்லி மெட்ரோ பாதுகாப்பு பொறுப்பு, ஒரு புதிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. டெல்லி மெட்ரோ மூலம் பயணம் செய்யும் பயணிகளுக்கு புதிய மாற்றங்கள் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமிபத்தில் பெங்களூரு மானபங்க வழக்கு போன்ற செயல்கள் பரப்பரப்பு ஏற்ப்பட்டு உள்ளது, இந்நிலையில் டெல்லி மெட்ரோ பெண்களுக்குகாக ஒரு புதிய மாற்றங்கள் கொண்டு வந்துஉள்ளது. டெல்லி மெட்ரோவில் பயணம் செல்லும் பெண்கள் அவர்களுடன் கத்தி எடுத்து செல்ல அனுமதி தரப்பட்டுள்ளது. மேலும் மெட்ரோ ரயில் உள்ளே நெருப்புப்பெட்டிகள் மற்றும் தீமூட்டி எடுத்துக்கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக சிறிய கத்திகள், தீமூட்டி மற்றும் நெருப்புப்பெட்டிகள் டெல்லி மெட்ரோ எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
மேலும் ஒரு பயணி ஒரு தீமூட்டி மற்றும் ஒரு தீப்பெட்டி எடுத்து செல்லலாம். வேலைக்கு எடுத்து செல்லும் கருவிகள் போன்றவை எடுத்துக்கொண்டு செல்ல இனி அனுமதிக்கப்படும் என்று சிஐஎஸ்எஃப் அதிகாரி கூறியுள்ளார்.