பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த எம்.பி சையத் ஹூசைன், பெண்கள் பருவ வயதை எட்டியவுடன் திருமணம் செய்து கொள்வதில் தப்பில்லை எனத் தெரிவித்தார். செக்ஸூவல் மெச்யூரிட்டி இருக்கும் பெண்கள் 16 வயதில் கூட திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறிய அவர், அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | ’மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியா’ மயில்சாமி அண்ணாதுரை தகவல்


ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த சையத் ஹசன், " 18 வயதாகும் பெண்கள் ஓட்டுப்போடலாம், ஆனால் திருமணம் செய்து கொள்ளக்கூடாதா? எனக் கேள்வி எழுப்பினார். பருவ வயதில் பெண்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் இரண்டு விதமான பிரச்சனைகளை எதிர்கொள்ளக்கூடும் என எச்சரித்தார். அதாவது, பருவ வயதில் திருமணம் செய்யாதவர்கள் குழந்தையின்மை பிரச்சனையை சந்திக்ககூடும் அல்லது மிகவும் காலதாமதமாக குழந்தை பெற்றுக்கொள்வார்கள் எனத் தெரிவித்தார். இதனால், குழந்தைகளுக்கான கடைமையை நிறைவேற்றுவதற்கு முன்பே பெற்றோர்களுக்கு வயதாகிவிடும் என விளக்கமளித்தார். 


ஹசனின் இந்தக் கருத்துக்கு சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த மற்றொரு எம்பியான ரஹ்மான் பார்க் ஆதரவு தெரிவித்துள்ளார். ஏழ்மையான நாடாக இருக்கும் இந்தியாவில், பெண் குழந்தைகளை சீக்கிரமாக திருமணம் செய்து கொடுப்பதையே பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புகிறார்கள் எனத் தெரிவித்தார். ஆனால், அவர்களின் கருத்துக்கு சமாஜ்வாடி கட்சியின் தலைமை ஆதரவு தெரிவிக்கவில்லை. இது குறித்து உத்தரப்பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் அகிலேஷ் யாதவிடம் கேட்டப்போது, கட்சி நிலைப்பாடு அதுவல்ல எனத் தெரிவித்தார்.


ALSO READ | அதிக Spam call அழைப்புகள்:இந்தியாவிற்கு நான்காவது இடம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR