கோவிடா, கோவினா, க்வாரண்டினா - மணிபூரில் பிறந்த கொரோனா கால குழந்தைகள்
கொரோனா காலத்தில், மணிபூரின் கேங்போக்பி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்படும் மையங்களில் சிகிச்சையில் இருக்கும் பெண்கள் மூன்று ஆரோக்கியமான குழந்தைகளை ஈன்றெடுத்தனர் என சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொரோனா காலம் நமது கற்பனைக்கு அப்பாற்பட்ட பல விஷயங்களை நமக்குக் காட்டியுள்ளது. நம்ப முடியாத பல விஷயங்கள் நடந்துள்ளன. இக்காலத்தில், நாம் சிந்தித்திராத பலவற்றை செய்துள்ளோம். கொரோனா, மக்களை வீடுகளுக்குள் முடக்கியது. தினக்கூலி தொழிலாளர்களை சாலைகளில் பசி தாகத்துடன் அலைய வைத்தது. இப்படி கொரோனாவின் (Corona) கொடூரங்கள் பல உள்ளன. எனினும், இந்த கொரோனா காலத்தில் மனதிற்கு இதமளிக்கும் பலவற்றையும் நாம் பார்த்தோம். அப்படிப்பட்ட ஒரு இதமளிக்கும் செய்திதான் மணிபூரிலிருந்து வந்துள்ளது.
கொரோனா காலத்தில், மணிபூரின் (Manipur) கேங்போக்பி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்படும் மையங்களில் (Quarantine Centres) சிகிச்சையில் இருக்கும் மூன்று பெண்கள் (Women) மூன்று ஆரோக்கியமான குழந்தைகளை (Babies) ஈன்றெடுத்துள்ளனர் என ஒரு சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
இரு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் இங்கு பிறந்துள்ளன. இமானுவேல் க்வாரண்டினோ மற்றும் கோவிடா என ஆண் குழந்தைகளுக்கும் கோவினா என பெண் குழந்தைக்கு பெயரிடப்பட்டுள்ளன.
முன்னதாக, மே மாதம் 31 ஆம் தேதி, மாவட்டத்தின் ஹைபியில் உள்ள இமானுவேல் பள்ளியில் இயங்கி வந்த தனிமைப்படுத்தும் மையத்தில், ஒரு பெண்மணிக்கு ஆண் குழந்தைப் பிறந்தது. ஜூலை 1 அன்று இங்கிருந்த மற்றொரு பெண்ணிற்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஜூலை 3 அன்று தும்னௌபோகி தனிமைப்படுத்தும் மையத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தனிமைப்படுத்தும் மையங்களில் மிகவும் சோர்வான மன நிலையில் இருக்கும் வேளையில், இந்தக் குழந்தைகளின் வருகை புத்துணர்ச்சியை அளிப்பதாக அங்குள்ள அனைவரும் கருதுகிறார்கள்.
நாளுக்கு நாள் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அனைவரையும் பீதி ஆட்டிப்படைக்கிறது. இந்நிலையில் குழந்தைகளின் வருகை நோயாளிகளின் கவனத்தைத் திருப்பியுள்ளது.
ALSO READ: ஒரு பாலமும் ஐந்து திருமணங்களும்! கொரோனா கால புதுமைகள்!!
மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவ ஊழியர்களும் சேர்ந்து முதலில் பிறந்த ஆண் குழந்தைக்கு இமானுவேல் க்வாரண்டினோ என பெயரிட்டனர். அதற்குப் பிறகு பிறந்த பெண் குழந்தை கோவினா என்றும் ஆண் குழந்தை கோவிடா என்றும் முறையே பெயரிடப்பட்டன.
மூன்று குழந்தைகளும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாக தனிமைப்படுத்தும் மையத்திலிருந்து வரும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.