சீனாவுக்கு அளிக்கும் கடன் உதவியை மேலும் குறைக்க போவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாஷிங்டன்: சீனாவுக்குக் கடன் கொடுப்பதை நிறுத்துமாறு உலக வங்கிக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தும் சீனாவுக்குக் கடன் வழங்க உலக வங்கி நேற்று முன்தினம் முடிவெடுத்தது. சீனாவுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் வரை  குறைந்த வட்டிக்குக் கடன் வழங்க உலக வங்கி முடிவு செய்தது.


“சீனாவுக்கு உலக வங்கி ஏன் கடன் கொடுக்கிறது? இது எப்படி சாத்தியமாகும்? சீனாவிடம் நிறைய பணம் இருக்கிறது. அப்படி இல்லாவிட்டால் பணத்தை அவர்கள் தயாரிப்பார்கள். கடன் கொடுப்பதை நிறுத்துங்கள்,” என்று அதிபர் டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டார். “சீனாவுக்கு உலக வங்கி கடன் கொடுப்பது வெகுவாகக் குறைந்துள்ளது.


சீனாவுக்கு அளிக்கும் கடன் உதவியை மேலும் குறைக்க போவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகள் ஆகியவற்றுக்கு உலக வங்கியால் பல திட்டங்களுக்கு கடன் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சீனாவுக்கும் வளரும் நாடு என்ற முறையில் உலக வங்கி கடன் அளித்து வருகிறது. அண்மையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், சீனாவிடம் அதிகளவில் நிதி இருப்பதாகவும், ஆதலால் கடன் அளிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.


இந்நிலையில், அமெரிக்க பொருளாதார விவகாரத்துறை முன்னாள் அதிகாரி டேவிட் மால்பாஸ் தலைமையில் செயல்படும் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏற்கெனவே சீனாவுக்கு கடன் அளிப்பது பலமடங்கு குறைந்து விட்டது, வரும் காலத்தில் மேலும் அது குறைக்கப்படும் என அறிவித்துள்ளது. வளர்ந்து விட்ட நாடுகளுக்கு கடனை நிறுத்த போவதாகவும் குறிப்பிட்டுள்ளது.