கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ5000 வீதம் 3 ஆண்டுக்கு நிதியுதவி
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தில் கொரோனாவுக்கு பலியானவர் குடும்பத்திற்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்குவதாக கேரள மாநில அரசு அறிவித்துள்ளது
திருவனந்தபுரம்: கொரோனாவின் பாதிப்பு உலகையே புரட்டி போட்டிருக்கும் நிலையில் வாழ்க்கையையே கொ.மு, கொ.பி என பிரித்து பேசும் அசாதாரண சூழல் உருவாகிவிட்டது. அதாவது கொரோனாவுக்கு முன் இப்படி இருந்தோம், கொரோனா பின் இப்படி நிலைமை மாறிவிட்டது என வாழ்க்கையையே கி.மு., கி.பி என்பது போல் பிரித்து பார்க்கும் சூழ்நிலையால் மக்கள் அனைவரும் துன்பப்படுகின்றனர்.
கொரோனா கொடுந்தொற்று ஏற்பட்ட பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமாகின்றனர். அதைவிட அதிகமானவர்கள், மருத்துவமனைக்கு செல்லாமலேயே சிகிச்சை பெற்று குணமாகின்றனர். சிகிச்சை பலனின்றி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கைக்கும் குறைவில்லை.
குடும்பத்தில் வருவாய் ஈட்டுபவர்கள் கொரோனாவுக்கு பலியாவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பரிதவிக்கும் குடும்பங்களின் சோக்க்கதை அனைவரின் மனதையும் உலுக்குகிறது. கொரோனாவால் பலியானவர்களுக்கு பல்வெறு மாநில அரசுகளும், மத்திய அரசும் நிவாரணங்களை அறிவித்துள்ளன.
ஆனால், அதில் கேரள மாநிலம் இதுவரை யாரும் வெளியிடாத ஒரு நிவாரணத்தை அறிவித்துள்ளது. இந்தியாவிலேயே கேரளாவில் தான் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. இன்றுவரை தினசரி பாதிப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் குறையவில்லை என்பது கவலையளிக்கும் விஷயமாகவே தொடர்கிறது.
இந்நிலையில், கேரள மாநில அரசின் நிதியுதவி அறிவிப்பு மக்களின் வயிற்றில் பாலை வார்ப்பதாக அமைந்துள்ளது. கேரளாவில் வசிக்கும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தில் யாராவது கொரோனாவுக்கு பலியானால்அந்த குடும்பத்திற்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்குவதாக கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது.
கொரோனாவுக்கு பலியானவர், வெளிமாநிலத்திலோ அல்லது வெளிநாட்டிலோ இறந்தாலும், அந்த நபரின் குடும்பம் கேரளாவில் நிரந்தரமாக வசித்து வருபவர்கள் என்றால், அவர்களுக்கு நிவாரண உதவி கிடைக்கும். இந்த நிவாரணத் தொகை பெறுவதற்காக சில நிபந்தனைகளையும் கேரள மாநில அரசு விதித்துள்ளது. நிவாரணம் பெறும் குடும்பத்தில் யாரும் அரசு வேலையில் இருக்கக்கூடாது மற்றும் வருமான வரி செலுத்துபவரின் குடும்பத்திற்கும் இந்த நிவாரணம் கிடைக்காது.
READ ALSO | கொரோனா மரணங்களுக்கு ஒன்றிய அரசே இழப்பீடு வழங்க வேண்டும்.
இந்த நிவாரணத் திட்டத்தின் கீழ். விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியுடையதாக கண்டறியப்பட்டால், அவர்களின் வங்கிக் கணக்கில் 30 நாட்களில் நிவாரண தொகை செலுத்தப்படும் என்று கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக, கொரோனா மரணங்களுக்கான இழப்பீட்டுத்தொகையை மத்திய அரசே வழங்கிட வேண்டும் என்றும், இந்த சுமையை மாநில அரசுகளின் தோளில் சுமத்தக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் ஆட்சியில் இருக்கும் கட்சி கொரோனா மரணங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தாலும், பலியானவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு எடுத்திருக்கும் நிதியுதவித் திட்டம் மூன்றாண்டுகளுக்கு நீடிக்கும் என்பது அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
இந்தியாவில் இப்படி நீண்ட காலத்திற்கு கொரோனா நிவாரண நிதியுதவி வழங்கும் முதல் மாநிலமாக கேரள மாநில அரசு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
READ ALSO | Kendriya Vidyalaya பள்ளிகளில் ஆசிரிய நியமனம்: மத்திய அரசு பதில்- வெங்கடேசன் MP
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR