Wrestlers Protest: டெல்லியில் நடைபெற்று வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் வரும் ஜூன் 15ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உடனான சந்திப்புக்கு பிறகு மல்யுத்த வீரர்கள் அறிவித்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று 5 மணி நேர கூட்டத்திற்குப் பிறகு, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களிடம் எழுத்துப்பூர்வ முன்மொழிவை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் வழங்கினார். மல்யுத்தக் கூட்டமைப்பு தலைவரான பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான விசாரணையை ஜூன் 15ஆம் தேதிக்குள் முடிப்பதாக அதில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரைக் கைது செய்வது குறித்து எதுவும் அதில் குறிப்பிடவில்லை. எனவே, தான் வீர்ரகள் 15ஆம் தேதி வரை போராட்டத்தை ஒத்திவைத்துள்ளனர்.



ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், சாஷி மாலிக்கின் கணவர் சத்யவர்த் கடியான் மற்றும் ஜிதேந்தர் கின்ஹா ஆகியோர் மத்திய அமைச்சருடனான கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவருக்கு எதிரான போராட்டக்காரர்களில் முக்கியமானவரான வினேஷ் போகட் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.


அனுராக் தாக்கூர் உடனான கூட்டத்திற்கு பிறகு பேசிய சாக்ஷி மாலிக்,"காவல்துறை விசாரணை ஜூன் 15 ஆம் தேதி அன்று முடியும் என கூறியுள்ளனர். அதுவரை நாங்கள் காத்திருந்து போராட்டத்தை நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டோம். மே 28 அன்று மல்யுத்த வீரர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை டெல்லி காவல்துறை திரும்ப பெறும் என உறுதியளிக்கப்பட்டது" என்றார். 


மேலும் படிக்க | ஒடிசா ரயில் விபத்து: கணவர் இறந்துவிட்டார்... நிவாரண தொகைக்காக பொய் சொன்ன மனைவி


மல்யுத்த வீரர்களின் பிரச்சனைகள் குறித்து பேச அரசு தயாராக உள்ளது என அனுராக் தாக்கூர் நேற்று ட்வீட்டில் தெரிவித்தார். இதற்காக அவர்களை மீண்டும் சந்திக்க அழைத்துள்ளேன் என்றார் அவர். தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும் என்று மல்யுத்த வீரர்கள் தொடர்ந்து போராடி வந்தனர். மே 28ஆம் தேதி திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கி மல்யுத்த வீரர்கள் பேரணி நடத்தினர். அவர்களை வலுகட்டாயமாக தடுத்து நிறுத்தி போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது வழக்கும் பதிவு செய்தனர்.  


ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை சாக்ஷி மாலிக், அரசின் இந்த முன்மொழிவை பரிசீலித்து ஒன்றாக முடிவெடுப்போம் என்று முன்னதாக தெரிவித்தார். "அரசு கொடுத்த எழுத்துப்பூர்வ முன்மொழிவை மூத்தவர்களுடனும் ஆதரவாளர்களுடனும் விவாதிப்போம். அந்தப் முன்மொழிவை நன்றாக இருக்கிறது என்று அனைவரும் சம்மதம் தெரிவித்தால்தான் நாங்கள் சம்மதிப்போம்" என்றார் அவர். 


மேலும் படிக்க | ஆணாதிக்கம் வெறுக்கப்பட வேண்டியது: கேரள உயர் நீதிமன்றத்தை கூற வைத்த ரெஹானா ஃபாத்திமா யார்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ