எடியூரப்பா விடுதலை- ரூ.40 கோடி லஞ்ச வழக்கில்!!
பெல்லாரி நிலக்கரி சுரங்க ஒப்பந்த விவகாரத்தில் ரூ.40 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் பா.ஜ.க கர்நாடக மாநில தலைவர் பி.எஸ்.எடியூரப்பா விடுதலையாகியுள்ளார். வாய்மை வென்றுள்ளது என்று எடியூரப்பா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
பெங்களூர்: பெல்லாரி நிலக்கரி சுரங்க ஒப்பந்த விவகாரத்தில் ரூ.40 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் பா.ஜ.க கர்நாடக மாநில தலைவர் பி.எஸ்.எடியூரப்பா விடுதலையாகியுள்ளார். வாய்மை வென்றுள்ளது என்று எடியூரப்பா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
எடியூரப்பா மீதான லஞ்ச புகாரை அரசு தரப்பில் எந்த ஆதாரங்களும் நிரூபிக்கவில்லை எனக்கூறி சிபிஐ கோர்ட் இன்று அவரை விடுதலை செய்தது. என்மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட வழக்கில் இருந்து விடுதலையாகியுள்ளது என்று தீர்ப்பு வெளியான பிறகு எடியூரப்பா நிருபர்களிடம் கூறினார்.
மேலும் பெருமையுடன் மாநிலம் முழுக்க பிரயாணம் செய்து கட்சியை வளர்ப்பேன் என்றும் மீண்டும் பாஜகவை கர்நாடகாவில் ஆட்சிக்கு கொண்டுவருவேன் எடியூரப்பா கூறினார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் சத்யமேவ ஜெயதே என பதிவிட்டிருந்தார்.