புதுடெல்லி: டிஷ் டிவிக்கு எதிராக யெஸ் வங்கியின் சில நகர்வுகள் காரணமாக கடந்த சில நாட்களாக, யெஸ் வங்கி மற்றும் டிஷ் டிவி குறித்த செய்திகள் பரபரப்பாக அனைத்து தளங்களிலும் விவாதிக்கப்பட்டன. பணத்தை செலுத்திய பிறகு பிரச்சனை தீர்க்கப்படும். டிஷ் டிவியில் புதிய இயக்குநர்களை நியமிக்க யெஸ் வங்கி முன்மொழிந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்போது, யெஸ் வங்கி மற்றும் ப்ராக்ஸி ஆலோசனை நிறுவனமான முதலீட்டாளர் ஆலோசனை சேவைகள் இந்தியா லிமிடெட் (IiAS) அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்க முடியாமல் சிக்கியுள்ளன. அவற்றில் சில கேள்விகள் இங்கே கீழே குறிப்பிட்டுள்ளோம்.


- யெஸ் வங்கி ஏன் சலுகையை முன்வைத்தது? அதை ஏன் IiAS ஆதரித்தது?


- யெஸ் வங்கி மற்றும் ஐஐஏஎஸ் ஆகியவை பெரிய முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனவா?


- டிஷ் டிவியை வாங்க விரும்புபவர்களின் சார்பாக ஐஐஏஎஸ் வேலை செய்கிறதா? வங்கி மற்றும் IiAS இணைந்து சில தேர்ந்தெடுக்கப்பட்ட செய்திகளை மட்டுமே பரப்புதலில் ஈடுபடுகின்றனவா?


- நிதி முடிவுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று IiAS கூறுகிறது - இந்த நடவடிக்கையால் யார் பயனடைவார்கள்? ஏன் இந்த ஆலோசனை?


- ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எதிர்கொண்ட ஒருவரை நியமிப்பதற்கான யெஸ் வங்கியின் முன்மொழிவில் ஐஐஏஎஸ் அமைதியாக இருப்பது ஏன்?


- உங்களுக்கான உரிமைகளில் என்ன பிரச்சனை? பணம் நிறுவனத்திற்கு செல்கிறது, தனிநபரின் பாக்கெட்டுக்கு அல்ல - உண்மையில் என்னதான் பிரச்சனை? யெஸ் வங்கியின் நோக்கம் என்ன?


- டிஷ் டிவி நிர்வாகம் மாற்றத்தை கோருகிறது ஆனால் இதன் மூலம் யெஸ் வங்கி எதை அடைய விரும்புகிறது?


-யெஸ் வங்கியால் முன்மொழியப்பட்டவர்களுக்கு (nominees) டிடிஎச் துறையில் நல்ல அனுபவம் உள்ளதா?


டிஷ் டிவியின் விஷயத்தில், யெஸ் வங்கி மற்றும் ஐஐஏஎஸ் ஆகியவற்றின் செயல்கள் மற்றும் நோக்கங்கள் குறித்து சந்தேகத்தை ஏற்படுத்தும் பல காரணிகள் உள்ளன. முதலீட்டாளர்களின் மனதில் சந்தேகங்களை உருவாக்க ஒரு திட்டம் இருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் அத்தகைய நடவடிக்கை நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மையை இழக்க வழிவகுக்கும். யெஸ் வங்கி மற்றும் IiAS நிறுவனத்தின் பதிலுக்காக ஜீ மீடியா தரப்பில் இருந்து மெயில்கள் அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால் அவர்களிடமிருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR