மும்பை: மற்றொரு அதிர்ச்சி சம்பவத்தில், மும்பை தண்டவாளத்தில் இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஸ்டிரா மாநிலம் சியோன் மற்றும் குறல் இரயில்வே நிலையங்களுக்கு இடையேயான தண்டவாளத்தில் இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


ப்ரத்திக்ஷா விஷால் சிண்டி என அடையாளம் காணப்பட்ட இவர் சோலாப்பூர் மாவட்டத்தின் விஜயவாடா அல்லது யஸ்வந்த்நகர் பகுதியை சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.


மேலும் இவர் மும்பை காவல்துறையின் உள்ளூர் ஆயுத பிரிவு-1 துறையினை சார்ந்தவர் என தெரிகிறது.


இவர் தண்டவாளத்தினை கடக்க முயற்சிக்கையில் ஐதராபார் DN எக்ஸ்பிரஸ் மூலம் தாக்கப்பட்டு இருக்கலாம் என மும்பை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


குறல் இரயில்வே அதிகாரிகள் சம்பவயிடத்திற்கு விரைந்து அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜ்வாடி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பிரிவு 174-ன் கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!