எவரெஸ்ட் சிகரத்தை கடந்த இந்தியாவின் இளம் பெண்மணி என்ற பட்டத்தை பெற்ற சிவாங்கி பாத்தாக், தற்போது மேலும் ஒரு சாதனையினை நிகழ்த்தியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

17-வயதாகும் இந்த ஹரியானா சிறுமி ஆப்பிரிக்காவின் மிக உயர்ந்த சிகரமான கிளிமஞ்சாரோ மவுண்ட்-னை மூன்று நாட்களில் கடந்துள்ளார். அவரது புதிய சாதனை உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தலுக்கா காத்திருக்க நாடுமுழுவதிலும் இருந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வன்னம் உள்ளது.


இதுகுறித்து ANI செய்தியாளர்களிடம் தனது கருத்தினை தெரிவித்துள்ளத சிவாங்கி...


"நான் எப்போதும் மற்றவர்களிடம் இருந்து வேறுபட்ட காட்சியளிக்க வரும்புகின்றேன். இந்திய கையுந்து பந்து வீராங்கனை மற்றும் இந்தியாவின் முதல் பெண் மலைஏற்றாலர் அரூனிமா சின்ஹா-வின் வீடியோகளை பார்த்தப் பிறகு மலை ஏறுதல் குறித்து ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன். இந்த வீடியோக்கள் என்னை மேலும் ஊக்கப்படுத்தியது.



என்னுடைய முயற்சிக்கு எனது குடும்பமும் உறுதுனையாக நின்றது. என்னுடைய ஒவ்வொரு முயற்சிக்கு முன்னரும் எனது குடும்பத்தாரை ஒப்பக்கொள்ள வைக்கவேண்டிய கட்டாயமும் எனக்கு இருந்தது, எனினும் இதுவரை நான் கண்ட முயற்சிகளுக்கு உடன் நின்றது அவர்கள் என் பெற்றோர்கள் தான்." என தெரிவித்துள்ளார்.


சிவாங்கியின் லட்சியம் குறித்து கேட்கையில், உலகில் உள்ள அனைத்து மலை உச்சிகளையும் எட்ட வேண்டும் என்பது தான் தனது லட்சியம் என அவர் குறிப்பபிட்டுள்ளார்.