புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், பிரதமர் மோடியை திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அழைப்பு விடுப்பதற்காக வைத்திருந்த பத்திரிக்கையில் எழுத்து பிழையோடு இருந்தது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யுவராஜ் சிங், ஹஜீல் கீச் என்ற மாடல் அழகியை திருமணம் செய்யள்ளார். இதற்கான அழைப்பு பத்திரிக்கையை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரபலங்களுக்கு வழங்கி வருகிறார்.


இந்நிலையில், பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுப்பதற்காக அவரது தாயுடன் இன்று நாடாளுமன்ற கட்டிடத்திற்கு சென்றார்.


நரேந்திர மோடி (Narendra Modi) என்ற பிரதமரின் பெயரான அவர் அச்சடிப்பதற்கு பதிலாக நரேந்தர் மோடி (Narender Modi) என அச்சடிக்கப்பட்டிருந்தது. பிரதமரை பார்க்க நேரமானதால் அதை அப்படியே கொண்டு உள்ளே சென்று விட்டார்.


இவருக்கு நவம்பர் 30-ம் தேதி சண்டிகரில் திருமணம் செய்யள்ளார். அதன் பின் கோவாவில் டிசம்பர் 2-ம் தேதி இந்து முறைப்படி திருமணம் செய்ய உள்ளார். மேலும்  டிசம்பர் 5 மற்றும் 7-ம் தேதி சங்கீத் மற்றும் ரீசெப்சென் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளார்.