Zee Group Founder Subhash Chandra: எஸ்செல் குழுமத்தின் தலைவர் டாக்டர் சுபாஷ் சந்திரா செபியின் தலைவர் மாதபி பூரி புச் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இன்று பத்திரிகையாளர் சந்திப்பில், 2019 ஆம் ஆண்டில் நான் கூறினேன்... எங்கள் குழுமத்திற்கு சிலர் தீங்கு விளைவிக்க விரும்புகிறார்கள் என்று கூறினேன்.. அது மாதபி பூரி புச் தான் என செபி தலைவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள்
டாக்டர் சுபாஷ் சந்திரா வைத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜீ என்டர்டெயின்மென்ட் மற்றும் சோனி  ஜீ ஒப்பந்தத்தின் முறிவு குறித்தும் டாக்டர் சுபாஷ் சந்திரா பேசினார். இந்த ஒப்பந்தம் முறிந்ததற்கு மாதபி பூரி புச் தான் காரணம் என்றார். அதன்மூலம் சில்லறை பங்குதாரர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு மாதபி பூரி புச் தான் காரணம் என அடுக்கடுக்காய் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.


பத்திரிகையாளர் சந்திப்பில் டாக்டர் சுபாஷ் சந்திரா முன்வைத்த முக்கியமான குற்றச்சாட்டுகள்!


- எஸ்சல் குழுமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் மாதபி பூரி புச் செயல்பட்டார்.


- அதன் காரணமாக ஜீ என்டர்டெயின்மென்ட் மற்றும் சோனி  ஜீ ஒப்பந்தம் முறிந்தது.


- அதனால் எங்களை விட அதிகம் அதிகம் பாதிக்கப்பட்டது  சில்லறை பங்குதாரர்கள் தான்.  


-  பங்குதாரர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு மாதபி பூரி புச் தான் காரணம்.


- 2 மியூச்சுவல் ஃபண்டுகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது


- இந்த பிரச்சனை சம்பந்தமாக மாதபி பூரி புட்ச்சை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம்.. ஆனால் அவர் நேரம் கொடுக்கவில்லை.


மேலும் படிக்க - செபி தலைவர் மாதபி பூரிக்கு மேலும் சிக்கல்.. அதிகாரிகள் நிதி அமைச்சகத்திடம் புகார்!


- அவர் சந்திக்க நேரம் கேட்டபோது, ​​அவர் என்னை ஒரு கெட்ட மனிதர் என்று கூறினார். மேலும் என் மகனிடம் நீ ஏன் உன் தந்தையை விட்டு பிரிந்து செல்லக்கூடாது என்று மாதாபி பூரி புட்ச் கூறியதாகவும் கூறியுள்ளார்.


- இந்த பிரச்சனையை தீர்க்க தன்னிடம் லஞ்சம் கேட்கப்பட்டதாக டாக்டர் சுபாஷ் சந்திரா செய்தியாளர் சந்திப்பில் குற்றம் சாட்டினார். 


- லஞ்சம் விவகாரத்தில் மஞ்சீத் சிங் என்ற நபர் இடைத்தரகராக செயல்பட்டார். 2024 பிப்ரவரி 17 ஆம் தேதி அவர் என்னிடம் மாதபி பூரி புட்ச் மற்றும் அவரது கணவருடனான பிரச்சினையை தீர்க்க முடியும் என்றும் கூறினார்.


- இந்த பிரச்சனையை தீர்க்க நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் லஞ்சம் கோரப்பட்டது. அவரின் பேச்சைக் கேட்ட எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நான் அங்கிருந்து வெளியேறினேன். மாதபி பூரி புட்ச் அப்படிபட்டவராக இருக்க மாட்டார் என எனக்குள் நானே கூறிக்கொண்டேன். 


- ஆனால் ஹிண்டன்பர்க் ரிப்போர்ட் வந்தபிறகு தான் உண்மை புரிகிறது. இடைத்தரகராக செயல்பட்ட மன்ஜீத் சிங் சொல்வது சரிதான் என்று கூறினார்.


- ஐசிஐசிஐ வங்கியின் சந்தா கோச்சாருக்கும், மாதபி பூரி புச்க்கும் இடையே அடிக்கடி பேச்சுவாரத்தை இருந்தது.


- இது குறித்து நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதியதாக டாக்டர் சுபாஷ் சந்திரா கூறினார்... ஆனால் பதில் வரவில்லை. ஒருவேளை மேடம் நிதி அமைச்சர் பிஸியாக இருப்பார் என்று டாக்டர் சுபாஷ் சந்திரா கூறினார்.


- செபி தலைவர் மாதபி பூரி புட்ச் தொடர்பான செய்திகள் ஜீ மீடியா தொடர்ந்து வெளியிடுகிறது. அதன் காரணமாக அவர்கள் எங்கள் மீது மிகவும் கோபமாக இருக்கிறார்கள். வேறு எந்த மீடியாவும் செய்திகளை ஒளிபரப்பாதபோது, ​​ஜீ மீடியா மட்டும் ஏன் SEBI க்கு எதிராக செய்திகளை வெளிகிறது என்று மாதபி பூரி புட்ச் தெரிவித்தாக டாக்டர் சுபாஷ் சந்திராவின் கூறினார். 


- குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாக்டர் சுபாஷ் சந்திரா நம்பிக்கை தெரிவித்தார்.


- எனக்குப் பிறகு மற்றவர்களும் அவர்களுக்கு எதிரான புகாருடன் வருவார்கள் என்றார். மேலும், அனைத்தையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.


மேலும் படிக்க - 'செபி தலைவர் புச் ஊழல்வாதி' எஸ்செல் குழும தலைவர் சுபாஷ் சந்திரா குற்றச்சாட்டு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ