உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் நிகழ்ந்த பத்து சுவாரஸ்யமான செய்திகளின் தொகுப்பு உங்களுக்காக கீழே அளிக்கப்பட்டுள்ளது.....!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1. அமெரிக்கா தூதரகம் அருகே ஈரான் தாக்குதல்:


இராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் உட்பட 2 இடங்களில் 4 ஏவுகணைகளை வீசி தாக்கியது. இரண்டு ஏவுகணைகள் அமெரிக்க தூதரகம் இருக்கும் பசுமை மண்டலத்தில் விழுந்தன. தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்க தூதரகம் காலி செய்யப்பட்டது. பாலாட் விமான தளத்திலும் ஏவுகணை வீசப்பட்டது. இதில் 3 இராக்கிய வீரர்கள் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் பாக்தாத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இராக்கிய வீரர்களை அமெரிக்க ராணுவ தளங்களில் இருந்து விலகி இருக்குமாறு ஹிஸ்புல்லு அறிவுறுத்தியுள்ளார். ஈரானிய ராணுவத் தளபதி சுலைமானி கொல்லப்பட்டதிலிருந்து அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்தது. இந்த தாக்குதல் மூலம் அமெரிக்காவை ஈரான்  பழிவாங்கியது.


2. திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் குறித்து பாஜக விழிப்புணர்வு பிரச்சாரம்:


திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் குறித்து இன்று முதல் மக்களிடம் விளக்கம் அளிப்பதற்காக பாஜக விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்குகிறது. 35 அமைச்சர்கள் உட்பட 42 தலைவர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா தில்லியிலும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோவிலும், பிரச்சாரத்தைத் தொடங்குகின்றனர். மக்கள் மத்தியில், குறிப்பாக முஸ்லிம்களிடையே சி.ஏ.ஏ பற்றி குழப்பத்தை பரப்புவதில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன என்று பாஜக கூறுகிறது. அதை அகற்றுவதற்காக இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
 
3. டெல்லி சட்டப்பேரவை தேர்தல் - பாஜக மாநாடு:


தில்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வெற்றி வியூகத்தை வழங்க தில்லியில் பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாட்டை பாஜக நடத்துகிறது. இந்திரா காந்தி மைதானத்தில் நடைபெறும் மாநாட்டில் பாஜக தலைவர் அமித் ஷா தொண்டர்களுடன் ஆலோசனை நடத்துவார். அப்போது தில்லியைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு முக்கிய ஆலோசனைகளை அமித் ஷா எடுத்துரைப்பார். பாஜக நகர  தலைவர், இளைஞரணியினர் உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்கின்றனர். சட்டப்பேரவைத் தேர்தலில் பூத்தில் சிறப்பாக பணியாற்றுவதற்கான வழிமுறைகள் தெரிவிக்கப்படும். தேர்தலின்போது வாக்காளர்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்து வருவது குறித்தும் திட்டமிடப்படுகிறது. பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்க வலியுறுத்தவும் ஆலோசிக்கப்படுகிறது.


4. மகாராஷ்டிரா அமைச்சரவை அமைப்பதில் நீடிக்கும் குழப்பம்:


மகாராஷ்டிரா அமைச்சர் அப்துல் சத்தார் தான் ராஜினாமா செய்யவில்லை என்று கூறியுள்ளார். சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரேவை மாதோஷ்ரீயில் சந்தித்து தனது நிலையை  தெளிவுபடுத்துவேன் என்றும் சத்தார் கூறினார். முன்னதாக, அமைச்சரவை ஒதுக்கீடு தொடர்பாக சிவசேனை செயல்பாட்டில் அப்துல் சத்தார் வருத்தமடைந்துள்ளதாகவும், அவர் ராஜினாமா செய்ததாகவும் செய்திகள் வெளியாகினர். சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத்தும் அவர் ராஜினாமா செய்த செய்தியை கேள்விப்பட்டதாக கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் அவுரங்காபாத்தில் அப்துல் சத்தாரை சந்தித்து சமாதானப்படுத்தினர்.


5. மக்கள் பயப்படப் போவதில்லை - சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத்:


மும்பையில் ஜமாஅத்தே இஸ்லாமி சார்பில் சி.ஏ.ஏ-வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் உள்ள சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத் கலந்து கொண்டார். சி.ஏ.ஏவுக்கு அவர் ஆதரவு காட்டியதாக அவர் மீது முன்னதாக குற்றம் சாட்ப்பட்டது. இந்நிலையில் தர்ணாவில் பங்கேற்ற ராவத் முஸ்லிம்களை பயமுறுத்தும் இந்தச் சட்டம் இந்துக்களையும் அச்சுறுத்துகிறது என்றும் இந்த சட்டத்தின் மூலம், நம் நாடு உலகில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு மக்கள் பயப்படப் போவதில்லை. பாலாசாகேப் தாக்கரே நிச்சயமாக இந்துக்களின் மனம்கவர்ந்த தலைவர் என்று ரவுத் கூறினார். மேலும் அவர் இந்து அல்லது முஸ்லீம் யாராக இருந்தாலும் இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது என்று கூறினார். ..
 
6. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக லண்டனில் இந்திய வம்சாவளியினர் பேரணி:


குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவாக லண்டனில் வசிக்கும் இந்தியர்கள் பேரணி நடத்தினர். அப்போது பாரத் மாதா கி ஜெய் என்ற முழக்கங்களை எழுப்பியபடி பார்லிமெண்ட் சதுக்கத்துக்கு  அணி திரண்டு சென்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது, அந்தப் பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. முன்னதாக, CAA க்கு ஆதரவாக நடந்த  இந்தப் பேரணியை லண்டனில் வசிக்கும் பாகிஸ்தான் முஸ்லிம்கள் சீர்குலைக்க முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.


7. பாகிஸ்தானில் நங்கனா சாஹிப் குருத்வாரா மீதான தாக்குல் கோபமடைந்த சீக்கியர்கள்:


பாகிஸ்தானில் நங்கனா சாஹிப் குருத்வாரா மீதான தாக்குதலால் இந்தியாவின் ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழு கோபமடைந்துள்ளது. 4 பேர் கொண்ட எஸ்ஜிபிசி குழுவை பாகிஸ்தானுக்கு அனுப்பி அதை கையகப்படுத்த முடிவு செய்துள்ளது. தூதுக்குழு அங்குள்ள சீக்கிய குடும்பங்களை சந்திக்கத் திட்டமிட்டுள்ளது. மேலும் தாக்குதல் குறித்து பாகிஸ்தானின் பஞ்சாப் ஆளுநர் மற்றும் முதல்வரை சந்தித்து கண்டனத்தை தெரிவிக்க உள்ளனர். தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானைச் சேர்ந்த எஸ்ஜிபிசி தலைவர் கோபிந்த் சிங் லோங்கோவால் வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தானில் வசிக்கும் சீக்கியர்களும் பாதுகாப்பு கோரியுள்ளனர். இந்த விஷயத்தில் பாஜக, காங்கிரஸ், அகாலிதளம் சார்பில் தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது..
 
8. இந்தியா பதிலடி கொடுக்காது என்று பயங்கரவாத அமைப்புகள் உணர்ந்தன:


13 டிசம்பர் 2001 அன்று நாடாளுமன்றம் மீதான தாக்குதலுக்கும், 2008 நவம்பர் 26 அன்று மும்பை தாக்குதலுக்கும் பின்னர், இந்திய விமானப்படை பாகிஸ்தான் மீது விமானத் தாக்குதலுக்கு தயாராக இருந்தது. ஆனால் அதை அப்போதைய அரசாங்கம் அனுமதிக்கவில்லை என்று முன்னாள் விமானப்படைத் தலைவர் ஏர் சீப் மார்ஷல் விரேந்தர் சிங் தனோவா கூறியுள்ளார். இதன் காரணமாக, பயங்கரவாத நடவடிக்கைக்குப் பிறகு இந்தியா பதிலடி கொடுக்காது என்று பயங்கரவாத அமைப்புகள் உணர்ந்தன. பதான்கோட், யூரி மற்றும் புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தினர்.
இந்த பயங்கரவாதிகளை முந்தைய வழியில் கட்டுப்படுத்த முடியாது என்பதையும் இது காட்டியது என்று அவர் பேசியுள்ளார்.


9. நங்கனா சாஹிப் தாக்குதல் சம்பவம் குறித்து நவ்ஜோத் சிங் சித்து பேச வேண்டும்:


நங்கனா சாஹிப்பைத் தாக்கியவர்கள் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோரியுள்ளார் ... குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நங்கனா சாஹிப் மீதான தாக்குதலை பெருந்தன்மையுடன் விட்டால் ஆபத்தில் முடியும் என்றார். நங்கனா சாஹிப் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்று ட்விட்டரிலும் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். மேலும் பாகிஸ்தான் அரசு அங்குள்ள சீக்கியர்களை பயமுறுத்துகிறது என்று மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர்  கூறினார். தங்கள் உயிரைக் காப்பாற்றிய பின்னர் சீக்கியர்கள் இந்தியாவுக்கு வருவார்கள் என்பதை காங்கிரஸ் அவர்களிடம் சொல்ல வேண்டும் என்று கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து பதில் தரவேண்டும் என்று பாஜக தலைவர் மீனாட்சி லேகி  கூறினார். இதனிடையே காலிஸ்தான் பயங்கரவாதி கோபால் சாவ்லாவும் நங்கனா சாஹிப்பை கைப்பற்ற முயன்றதாக துணை ஆணையர் ராசா மன்சூர் அகமது கூறியுள்ளார்.


10. அப்பாவி மக்களை சுலைமானி பைத்தியக்காரத்தனமாகக் கொன்றார் என டிரம்ப் குற்றச்சாட்டு:


அமெரிக்க படைகளால் கொல்லப்பட்ட ஈரானிய ஜெனரல் காசிம் சுலேமானி தில்லியிலும் பயங்கரவாதத் தாக்குதலைத் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். . இந்தியாவில் அவர் எந்த வகையான சதித்திட்டம் தீட்டியிருந்தார் என்பதை டிரம்ப் வெளிப்படுத்தவில்லை. பயங்கரவாத திட்டம் இப்போது முறிந்து விட்டது. அப்பாவி மக்களை சுலைமானி பைத்தியக்காரத்தனமாகக் கொன்றார் என டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்க பாதுகாப்பு நிபுணர்களின் கருத்தின்படி சுலைமானி கொலை செய்வதற்கான வாய்ப்பு ஒபாமா மற்றும் புஷ் நிர்வாகங்களுக்கும் முன்னரே இருந்துள்ளது. ஆனால் அதைத் தொடர்ந்து வந்த அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு அவர்களால் அவ்வாறு செய்ய முடியவில்லை. இராக்கில் தனது ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொன்றதாக சுலைமானி மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.