இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் சந்தையில் 95% பங்குகளுடன் ஆதிக்கம் செலுத்தும் உணவு விநியோக  நிறுவனங்களாக Zomato மற்றும் Swiggy ஆகியவை "தொழில்நுட்ப சிக்கல்கள்" காரணமாக புதன்கிழமை  அன்று நாடு  முழுவதிலும் உள்ள பல இடங்களில் அதன் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளன


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Zomato மற்றும் Swiggy பயனர்கள் ஆர்டர்களை வழங்கவோ அல்லது மெனுக்கள் மற்றும் பட்டியல்களை தேர்ந்தெடுக்கவோ முடியாமல் போன நிலையில், சமூக ஊடகங்களின் மூலம் அளிக்கப்பட்ட புகார்களுக்கு  இரு நிறுவனங்களின் கஸம்ர் கேர் துறை பதிலளித்த வண்ணம் இருந்தன


ஜொமேட்டோ ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட செய்தியில், “வணக்கம், நாங்கள் ஒரு தற்காலிக  தொழிநுட்ப பிரச்சனையை எதிர்கொள்கிறோம். எங்கள் குழு கோளாறை சீர் செய்து வருகிறது;  நாங்கள் விரைவில்  சேவைகளை வழங்குவோம் " என பதிவிட்டுள்ளது.


மேலும் படிக்க | சென்னையில் 10 நிமிட உணவு டெலிவரி திட்டம் இல்லை: Zomato விளக்கம்!


ஸ்விக்கி கேர்ஸ்  பதிவிட்ட செய்தியில்“நாங்கள் தற்காலிக தொழில்நுட்பக் கோளாறை எதிர்கொள்கிறோம். சிக்கலை விரைவில் தீர்க்க, எங்கள் திறமையான குழு பணியாற்றுகிறது. மன்னிகவும். அதுவரை  சிறிது பொறுத்திருக்கு வேண்டுகிறோம்” என பதிவிட்டுள்ளது


முன்னதாக, Zomato மற்றும் Swiggy ஆகிய இரண்டும் நியாயமற்ற வணிக நடைமுறைகள் தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு வருவதாக இந்திய போட்டி ஆணையம் (CCI) தெரிவித்தது. நேஷனல் ரெஸ்டாரன்ட் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (என்ஆர்ஏஐ) புகார் அளித்த சில மாதங்களுக்குப் பிறகு நிறுவனங்களை விசாரணை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இருப்பினும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் என்ஆர்ஏஐ சிசிஐக்கு புகார் அளித்தபோது அந்த நிறுவனங்கள் குற்றச்சாட்டை மறுத்ததாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | Zomato Insta: குழப்பமே வேண்டாம்! 10 நிமிடத்தில் என்னவெல்லாம் கிடைக்கும்..!!


நாடு முழுவதும் உள்ள 5,00,000 உணவகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் NRAI, ஜொமேட்டோ, ஸ்விக்கி ஆகிய இரு நிறுவனங்களும் சில உணவகங்களுக்கு முன்னுரிமை அளித்ததாகக் கூறப்படும் புகாரை விசாரிக்குமாறு CCI யிடம் கோரியுள்ளது.


இரண்டு நிறுவனங்களும் உணவகங்களில் இருந்து "அதிகமான கமிஷன்களை" வசூலித்த பிறகு தள்ளுபடியை வழங்குவதாகவும் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. உணவகங்களுடனான நிறுவனங்களின் ஒப்பந்தங்கள், "நுகர்வோருக்கு எந்தப் பலனையும் கொடுக்காமல், புதிய தளங்களுக்கு நுழைவதில் தடைகளை" உருவாக்கலாம் என்று CCI கூறியது.


மேலும் படிக்க | Zomato கொடுத்த அதிர்ச்சி! முந்திரி-சீஸ் கறியில் இலவசமாக கிடைத்த கரப்பான் பூச்சி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR