Zomato கொடுத்த அதிர்ச்சி! முந்திரி-சீஸ் கறியில் இலவசமாக கிடைத்த கரப்பான் பூச்சி

எம்.பி.யைச் சேர்ந்த ஒருவர் ஜொமேட்டோவில் இருந்து முந்திரி-சீஸ் கறி மற்றும் ரொட்டியை ஆர்டர்  செய்த நிலையில், பேக்கிங்கை திறந்த போது நவருக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 17, 2022, 01:26 PM IST
Zomato கொடுத்த அதிர்ச்சி! முந்திரி-சீஸ் கறியில்  இலவசமாக கிடைத்த கரப்பான் பூச்சி  title=

மத்திய பிரதேச மாநிலம் ஷாஜாபூரில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இங்கே ஒரு நபர் Zomato ஆன்லைன் செயலி மூலம்  ஆர்டர் செய்து,  முந்திரி-சீஸ் கறி மற்றும் ரொட்டி ஆர்டர் செய்த நிலையில்,  கரிக்குள் கரப்பான் பூச்சிகள் இருந்தது வாடிக்கையாளருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பொறுப்பை தட்டிக்கழித்த ஹோட்டல் நிர்வாகம் 

கரப்பான் பூச்சி இருந்ததை அடுத்து, பாதிக்கப்பட்டவர் ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் அளித்தபோது, ​​அவர்கள் இதற்கு Zomato தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர். முந்திரி-சீஸ் கறி Zomato ஆர்டரின் பேரில் எங்களால் அனுப்பப்பட்டது, ஆனால் உணவை கொண்டு செல்லும் வழியில்  ஏதேனும் நடந்திருக்கலாம் எனக் கூறிவிட்டனர். அதே நேரத்தில், கரப்பான் பூச்சியுடன் வந்த முந்திரி-சீஸ் கறியின் அளவு குறைவாக இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டினார்.

மேலும் படிக்க | குழந்தையை அடிக்க உரிமையில்லையா? 2 மகன்களை கொன்று தற்கொலை செய்த தாய் 

முந்திரி-சீஸ் கறியில் இருந்த கரப்பான் பூச்சி

ஷாஜாபூரைச் சேர்ந்த பிரதீப் கோயல் புதன்கிழமை இரவு, ஜொமேட்டோவில் முந்திரி-சீஸ்கறி மற்றும் ரொட்டியை ஆர்டர் செய்ததாகக் கூறினார். டெலிவரி பாய் பார்சலை டெலிவரி செய்ய சென்று திறந்து பார்த்தபோது முந்திரி சீஸ் காய்கறியில் கரப்பான் பூச்சி தென்பட்டது. மேலும் காய்கறிகளின் அளவும் மிகவும் குறைவாக இருந்தது.

வாடிக்கையாளர் பிரதீப் டெலிவரி பாயை தொடர்பு கொள்ள முயன்ற போது, ​​ போனை யாரும் எடுக்கவில்லை. மேலும் அவர் Zomato செயலியில் ஆன்லைனில் புகார் செய்ய முயன்றபோது, ​​அதுவும் நடக்கவில்லை.

இதைத் தொடர்ந்து பிரதீப் ஹோட்டலுக்கு  முந்திரி சீஸ் கறியில் கரப்பான் பூச்சி இருந்ததை கூறினார். ஆனால் ஹோட்டல் மேலாளர் சுஷாந்த் சிங் தனது பொறுப்பை தட்டிக் கழித்ததோடு,  Zomato நிறுவனம் தன காரணம் என கை விரித்து விட்டார். ஜோமாட்டோவிடம் இருந்து டெலிவரி எடுத்தது யார் என்று ஹோட்டல் மேனேஜருக்கும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | கடை ஊழியரை கட்டி வைத்து அடித்த விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகி 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News