கடந்த 1-ம் தேதி முதல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், மாணவர்கள், இளைஞர்கள் என பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் நடைபெறும் ராணுவக் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை வந்தார். பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்புக்கொடி காட்டியும், கருப்பு பலூன்கள் பறக்கவிட்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டனர்.


இந்நிலையில், இதுக்குறித்து கவிஞர் வைரமுத்து, தனது ட்விட்டர் பக்கத்த்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் கூறியதாவது:-


கறுப்பு என்பது சர்வதேச மொழி. இந்தியப் பிரதமருக்குப் புரிந்திருக்கும். காவிரி மேலாண்மை வாரியத்தைக் கட்டி எழுப்புங்கள். அது கர்நாடகத்துக்கு அநீதி அல்ல; தமிழ்நாட்டுக்கு நீதி எனக் கருத்து தெரிவித்துள்ளார். #CauveryManagementBoard #CauveryIssue #WeWantCMB


 



 


தமிழகம் வந்துள்ள பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நடைபெற்ற போராட்டம் சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் #GoBackModi என்ற தலைப்பு உலக  அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.