பெங்களூருவில் இருந்து டெல்லி புறப்பட IndiGo நிறுவனத்தின் A320neo விமானம் இயந்திர கோளாறு காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நிலைகொண்டது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IndiGo நிறுவனத்தின் A320neo விமானம் (பெங்களூரூ - புதுடெல்லி) இயந்திர கோளாறு காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் காலை முதல் நிலைகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



முன்னதாக கடந்த மார்ச் 13-ஆம் நாள், நாட்டின் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை DGCA ,  தவறுதலான பிராட் & விட்னி இயந்திரங்களுடன் வெளிவந்த A320Neo விமானங்களை தரையிரக்கியதினை அடுத்து IndiGo நிறுவனம் தனது 47 விமானங்களின் சேவையினை ரத்து செய்தது.


புதுடெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, பாட்ன, ஸ்ரீநகர், புவனேஷ்வர், அமிர்தசரஸ், கௌகாத்தி உள்பட அண்டை நகரங்களுக்கு செல்லும் 47 விமான சேவையினை ரத்து செய்துள்ளதாக தங்களது அதிகாரபூர்வ இணையதளத்தில் IndiGo அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


இயந்திர கோளாறு காரணமாக IndiGo நிறுவன விமானங்கள் தரையிரக்கப்படுவது இது முதல் முறை அல்ல, முன்னதாக கடந்த மார்ச் 12-ஆம் நாள் அகமதாபாத்திற்கு சென்ற விமானம் ஆனது பழது காரணமாக கிளம்பி 40 நிமிடங்களில் நடுவானில் இருந்து லக்னோ-வில் தரையிரக்கப்பட்டது.


பாதுகாப்பு நலன் கருதி ESN 450 க்கு அப்பால் PW1100 இயந்திரங்களுடன் பொருத்தப்பட்ட A320 Neos விமானங்களை உடனடியாக தரையிரக்க வேண்டும் என நேற்று விமான சேவை பாதுகாப்பு இயக்குனரகம் தெரிவித்ததே இதற்கு காரணம் என அறிவிக்கப்பட்டது.


கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் இதேப் போன்ற இயந்திர கோளாரு காரணமாக மட்டும் 3 விமானங்கள் திடீரென தரையிரக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


சுமார் 1000 விமானங்களை கொண்டு தினமும் விமான சேவைகளை வழங்கி வரும் IndiGo நிறுவனம், கடந்த சில தினங்களாக தங்களது விமானங்களை பயணத்தின் இடையில் தரையிறக்கி வருவது தொடர்ந்து வருகிறது!