இண்டிகோ விமானத்தில் கொசுத்தொல்லை இருப்பதாக புகார் தெரிவித்த பயணியை  இண்டிகோ விமான ஊழியர் கீழே இறக்கி விட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லக்னோவிருந்து பெங்களூரு சென்ற இண்டிகோ விமானத்தில், கொசுத்தொல்லை இருந்ததாக சௌரப் ராய் என்ற பயணி அங்குள்ள விமான ஊழியரிடம் புகார் கூறியுள்ளார். சௌரப் ராய் பெங்களுருவில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். அவர் விமான ஊழியரிடம், "விமானம் சுத்தமாக இல்லை எனவும் அதை சுத்தப்படுத்து மாறும் கூறியுள்ளார். கொசுக்கள் மிக அதிகமாக உள்ளதால் நோய்கள் வரவாய்ப்புள்ளது" என தெரிவித்தார். 


தொடர்ந்து புகார் தெரிவித்ததால் அவருக்கும் ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் விமானத்தை விட்டு இறங்கும்படி, டாக்டரை பார்த்து இண்டிகோ விமான ஊழியர் கூறியுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதால், பெங்களூருவில் விமானத்தை இறக்கியதும், அந்த பயணியை இறங்கி ரன் வேயில் நடந்து வர கூறியிருக்கிறார் விமான ஊழியர்.


மேலும், புகார் தெரிவித்ததற்காக விமான ஊழியர்கள் தன்னை மிரட்டியதாகவும் டாக்டர் தெரிவித்துள்ளார். விமான ஊழியர்கள் அவரை கீழே இறக்கி விட்ட அந்த வீடியோவை டாக்டர் சௌரப் ராய் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.