4-மாத குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை!
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 4-மாத குழந்தை வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 4-மாத குழந்தை வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
இந்தூரின் ராஜ்வாடா குடியிறுப்பு பகுதியில் இன்று விடியற்காலை கைக்குழந்தை ஒன்று ரத்த வெள்ளத்திற்கு மத்தியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இச்சம்வம் குறித்து காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது.
சம்பவயிடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குழந்தையின் சடலத்தினை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மருத்துவ சோதனையில் குழந்தையின் தலையில் பலத்த அடி ஏற்பட்டுள்ளதால் மரணித்துள்ளதாகவும், இறப்பதற்கு முன்பு வன்கொடுமைக்கு தூண்டப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி ஹரிநாராயணசாரி தெரிவிக்கையில்.. பலியான குழந்தையின் தந்தை பலூன் விற்பனையாளர் எனவும், அவர் கொடுத்துள்ள புகாரின் பேரில் அவரது குடும்ப நபர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் முழுவிவரங்கள் கண்டறியப்படும் எனவும் அவர் தெரிவித்ததுள்ளார்.