அமராவதி: நான் அரசியலில் மூத்த தலைவர் தான் ஆனால் அந்த அதிகாரத்தினை பிறரிடம் திணிக்க விரும்பவில்லை என ஆந்திர முதல்வர் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திர மாநிலத்திற்கு தேவையான நிதியினை மத்திய அரசு அளிக்க மறுத்ததால், மத்திய அரசு ஆட்சி புரிந்து வரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக தெலுங்கு தேசம் கட்சி தெரிவித்தது. மேலும் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் தீர்மானித்தது.


தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மூலம் ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கு அநீதி இழைக்கப்பட்டது. இதன் காரணமாகவே தெலுங்கு தேச கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விளகியது என ஆந்திர மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் இந்த விலகளுக்கு காரணம் தெரவித்து இருந்தார்.



முன்னதாக தங்களது எதிர்ப்பினை தெரிவிக்கு வகையில் தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த 2 மத்திய அமைச்சர்கள் தங்களது பதவியையும் ராஜினாமா செய்தனர். இந்நிலையில் தற்போது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் தெரிவிக்கையில் "நான் அரசியலில் மூத்த தலைவர் தான் ஆனால் அந்த அதிகாரத்தினை பிறரிடம் திணிக்க விரும்பவில்லை, எங்களுக்கு தேவையான நிதி உதவியினை நியான முறையில் கேட்டோம், ஆனால் அதற்பு செவி சாய்காத மத்திய அரசு மாறாக அநீதி இழைத்துவிட்டது" என தெரிவித்துள்ளார்!