இந்து பெயரா? கிறிஸ்தவ பெயரா? குழந்தைக்கு பெயர் சூட்டிய நீதிமன்றம்
இந்து ஆணுக்கும், கிறிஸ்தவ பெண்ணுக்கும் பிறந்த குழந்தைக்கு பெயர் வைத்த கேரள உயர் நீதிமன்ற நீதிபதி எ.கே ஜெயசங்கரன் நம்பியார்.
கேரள உயர் நீதிமன்றத்தின் நீதிபதிக்கு ஒரு ருசிகரமான வழக்கு ஒப்படைக்கப்பட்டது. அந்த வழக்கில் வெவ்வேறு மதங்களை சேர்ந்த தம்பதியருக்கு பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டுவதில் தகராறு ஏற்பட்டதால், அந்தப் பெயரைப் பற்றிய வழக்கில் கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த்துள்ளது.
குழந்தையின் தந்தை இந்து மதத்தை சேர்ந்தவர், தாயார் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். தந்தை அவரது குழந்தைக்கு ‘அபிநவ் சச்சின்’ என்ற பெயர் சூட்ட விரும்பினார். ஆனால் தாயார் ‘ஜோகன் மணி சச்சின்’ என்ற பெயர் சூட்ட வேண்டும் எனக் கூறியுள்ளார். குழந்தைக்கு பெயர் வைப்பதில் தகராறு ஏற்பட, இது சம்பந்தமா கேரள உயர் நீதிமன்றத்திமனை நாடினார்கள் தம்பதியர்கள்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குழந்தையின் பெற்றோர்களை சமாதானப்படுத்தவும், அவர்களின் விருப்படியே, ‘ஜோகன் சச்சின்’ என்ற பெயரை குழந்தைக்கு வைத்தார் நீதிபதி. இருவரையும் திருப்திப்படுத்தவே, உங்கள் பெயரில் இருந்து ஜோகன் மற்றும் சச்சின் எடுத்துக்கொண்டு குழந்தைக்கு பெயர் சூட்டினேன் என நீதிபதி கூறினார்.
தற்போது குழந்தைக்கு ஐந்து வயது ஆகுவதால், ‘ஜோகன் சச்சின்’ என்ற பெயரில் பிறப்பு சான்றிதழ் 2 வாரங்களுக்குள் வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.