IPL 2018 தொடரின் போட்டிகள் தற்போது விருவிருப்பாக நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் போட்டிகள் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைப்பெற்று வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இத்தொடரின் 43-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. டெல்லி பெரோஸ் ஷா மைதானத்தில் நடைப்பெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் களமிறங்க உள்ளது.  


இரண்டாவது இடத்தில் இருக்கும் வலுவான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ஆறாவது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதுகிறது. இதுவரை பத்து ஆட்டங்களில் ஆடி உள்ள அஜிங்க்ய ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி வெறும் நான்கு போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் பட்டியலில் 6_வது இடத்தில் உள்ளது. 


எனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றால், அடுத்தடுத்து போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற வேண்டிய நெருக்கடியான நிலையில் ராஜஸ்தான் அணி உள்ளது. ஏற்கனவே கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற சென்னைக்கு எதிரான போட்டியில் 64 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. எனவே இன்றைய போட்டியில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி ஆடக்கூடும் என எதிர்பார்க்கபடுகிறது.


சென்னை அணியை பொருத்த வரை இன்றைய ஆட்டத்திலோ அல்லது எஞ்சியுள்ள மற்ற 3 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்றாலே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். இதுவரை பத்து ஆட்டங்களில் ஆடி உள்ள தோனி தலைமையிலான சென்னை அணி வெறும் மூன்று போட்டிகளில் மட்டும் தோல்வியை தழுவி உள்ளது. ஏழு போட்டியில் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் பட்டியலில் 2_வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்திலோ வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் இந்த சீசனின் இரண்டாவது அணியாகும். ஹைதராபாத் அணி ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுவரை ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சென்னை அணி 12 வெற்றியும், ராஜஸ்தான் அணி 6 வெற்றியும் பெற்றுள்ளது. அதேபோல இன்றைய போட்டி நடக்கவிருக்கும் ஜெய்ப்பூர் மைதானத்தில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் தலா இரண்டு வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன.