#IPL 2018: சென்னை அணி கோப்பையை கைப்பற்றுமா? வெற்றி யாருக்கு..?
ஐபிஎல் 11-வது சீசன் டி20 தொடரின் இறுதிப்போட்டி நாளை மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது!
ஐபிஎல் 11-வது சீசன் டி20 தொடரின் இறுதிப்போட்டி நாளை மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோத உள்ளன.
முன்னதாக, இத்தொடரின் முதல் குவாலிப்பையர் போட்டியில் ஐதராபாத் அணியை வென்று சென்னை அணி நேரடியாக பைனலுக்கு நுழைந்தது. இதையடுத்து, நேற்று நடைபெற்ற இரண்டாம் குவாலிப்பையர் போட்டியில்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன், மோதிய ஹைதராபாத் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இவ்விரண்டு அணிகளும் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்விரண்டு அணிகளும் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளனர். முந்தைய 3 போட்டிகளில் சென்னையிடம் பெற்ற தோல்விக்கு இறுதி போட்டியில் பதிலடி கொடுத்து கோப்பையை கைப்பற்ற ஐதராபாத் அணி தீவிரமாக உள்ளது.
அதேபோல், சென்னை அணி முந்தைய போட்டிகளில் ஐதராபாத் அணியை வீழ்த்தியதை போல இறுதிப்போட்டியிலும் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. சென்னை அணி இதுவரை 6 முறை இறுதி போட்டிக்கு தகுதிப்பெற்று 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஐதராபத் அணி இதுவரை 1 முறை இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்று அந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.