ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11-வது சீசன் நடந்து வருகிறது. ஐ.பி.எல்-ன் 37-வது லீக் ஆட்டம் இன்று மாலை 4 மணியளவில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்துள்ளது. 


இதனையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா ரைடர்ஸ் அணி களமிறங்கியது.


தொடக்க வீரர்களாக களமிறங்கிய கிரிஸ் லின் மற்றும் கிள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க கொல்கத்தா அணி திணறியது. இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ராபின் உத்தப்பா 4 ரன்கள் எடுத்திருந்த போது, அவர் கொடுத்த கேட்ச் ஒன்றை மும்பை வீரர் நழுவவிட்டார். இந்த அதிர்ஷ்டத்தை பயன்படுத்திக் கொண்ட ராபின் உத்தப்பா மும்பை அணி பந்து வீச்சை சிதறடித்து அரைசதம் விளாசினார்.


தொடர்ந்து விளையாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை மட்டுமே முடிந்தது,  இறுதியில் 13 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவை முறியடித்த மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது.