ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற #IPL2018 தொடரின் 54_வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க வீரர்கள் ஷிகார் தவான் மற்றும் கோஸ்வாமி அதிரடியாக விளையாடி அணியின் ரன்-ரேட்டை உயர்த்தினர். ஷிகார் தவான் அரைசதம் அடுத்து அவுட் ஆனர். ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 172 ரன் சேர்ந்தது.


173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், களம் இறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் ஆரம்ப முதலே அதிரடி காட்டினர். நான்காவது ஓவரிலேயே 50 ரன்களை எடுத்தது கொல்கத்தா அணி. 19.4 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 16 புள்ளிகள் பெற்று ஃபிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.