IPL 2018: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஐதராபாத் அணி
ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசனின் இறுதிச்சுற்றுக்கு ஐதராபாத் அணி முன்னேறி உள்ளது.
IPL 2018 தொடரின் முதல் குவாலிப்பையர் போட்டியில் ஐதராபாத் அணியை வென்று சென்னை அணி நேரடியாக பைனலுக்கு நுழைந்தது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாம் குவாலிப்பையர் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணிக்கு ஆரம்ப முதலே அதிரடியாக விளையாடியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு ஹைதராபாத் அணி 174 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை ரன்-ரேட் அடிப்படையில் உயர்த்தின. நல்ல துவக்கம் கொடுத்தாலும் முதல் மூன்று விக்கெட்டுக்கு பிறகு அடுத்தது களமிறங்கிய வீரர்கள் ஹைதராபாத்தின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அவுட் ஆகினர். 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா அணி 160 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ஹைதராபாத் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
நாளை நடைபெற உள்ள இறுதிச்சுற்று போட்டியில் சென்னை அணியை எதிர்க்கொள்கிறது ஹைதராபாத் அணி. இறுதிப்போட்டி நாளை இரவு 7 மணிக்கு மும்பை வான்கேட் ஸ்டேடியத்தில் நடைபெறும்.