IPL 2018: 4-வது இடத்திற்கு முன்னேறியது ராஜஸ்தான் ராயல்ஸ்!
IPL 2018 தொடரின் 53-வது போட்டியில் ராஜஸ்தான் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது!
IPL 2018 தொடரின் 53-வது போட்டியில் ராஜஸ்தான் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது!
IPL 2018 தொடரின் போட்டிகள் தற்போது விருவிருப்பாக நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் போட்டிகள் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைப்பெற்று வருகிறது.
இத்தொடரின் 53-வது போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் இன்று மோதின. ஜெய்பூர் மைதானத்தில் நடைப்பெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.
தொடக்க வீரராக களமிறங்கிய ராகுல் திருப்பாதி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 58 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். அவருக்கு துணையாக ரஹானே 33(31), ஹென்ரிச் 32(21) குவித்தார்.
இதனால் ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி 4(9) ரன்களில் வெளியேறினார். எனினும் எபிடி வில்லியர்ஸ் 53(35) மற்றும் பார்த்திவ் பட்டேல் 33(21) ரன்கள் எடுத்து அணிக்கு பலம் சேர்த்தனர். எனினும் இதற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இதனால் பெங்களூரு அணி ஆட்டத்தின் 19.2-வது ஓவரில் தனது 10 விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் ராஜஸ்தான் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டுது.
இந்த வெற்றியினை அடுத்து ராஜஸ்தான் அணி 14 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு முன்னேறியது ராயல்ஸ்.